பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா எழுதும் கடிதங்கள் அனைத்தும் குப்பை தொட்டிக்குத்தான் செல்கின்றன என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் தெரியபடுத்தி அது தொடர்பில் தீர்வு காணவேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகின்றமை வழமையான விடயம். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் சுவாமி,

பிரதமருக்கு கடிதம் எழுதுவதில் ஜெயலலிதா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆனால், அவரது எண்ணப்படி அவர் எழுதும் கடிதங்கள் அனைத்தும் குப்பைக்குதான் செல்கின்றன.

மருத்துவ நுழைத்து தேர்வுக்கு எதிராக அவர் எழுதிய கடிதம் குப்பை தொட்டிக்கு தான் செல்லும், அதுபோன்று ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய சொல்லியும் அவர் கடிதம் எழுதி வருகிறார் எல்லாம் குப்பைக்குத்தான் செல்லும் என தெரிவித்துள்ளார். சுவாமியின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.