பாராளுமன்ற வரையரைக்குள் மாத்திரமல்லாது மக்கள் ஆணையுடன் புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என  புதிய ஜனநாயக முன்னணியின்  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதேவேளை, அதிகார பேராசைகொண்ட சிறு குழுவிற்கு நாட்டை சீரழிக்க இனிஒருபோதும் இடமளியேன் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதேவேளை, தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவுடைய ஒருவரை பிரதமராக நியமிப்பேன் எனவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

இன்றையதினம் நண்பகல் ஒரு மணியளவில் தொலைக்காட்சியொன்றில் நேரலையில் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.