சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட 6 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது.

நேற்றையதினம் கடல் மார்க்கமாக சட்டவிரோத முறையில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட 6 பேர் சிலாபத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து , பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டதோடு அவர்களை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.