16 அடி உயர புத்தர் சிலை திரைநீக்கம் செய்யும் போது விபரீதம் ; மதத் தலைவர் பலி

07 Nov, 2019 | 02:04 PM
image

தாய்­லாந்தில் 16 அடி உய­ர­மான பாரிய புத்தர் சிலை­யொன்றை திரை­நீக்கம் செய்­து­வைக்க கௌரவ அதி­தி­யாக சென்ற  மதத் தலைவர் ஒருவர் அந்த சிலை சரிந்து விழுந்­ததால்  அதன் கீழ் சிக்கி  பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்ளார்.

கொன் கேன் எனும் இடத்தில் கடந்த திங்­கட்­கி­ழமை பிற்­பகல் இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறி த்து நேற்று புதன்­கி­ழமை தக­வல் கள் வெளியா­கி­யுள்­ளன.

சம்­பவ தினம் கிராம மதத் தலை­ வ­ரான சமன் சாந்­த­ஜோதி (52 வயது) குறிப்­பிட்ட புத்தர் சிலையை  வைபவ ரீதி­யாக திறந்து­வைப் ­ப­தற்கு சென்­றுள்ளார். இதன்­போது அந்த சிலை அவர் மீது சரிந்து விழுந்­ததால் அதன் கீழ் சிக்கி நசுங்­குண்டு அவர் உயி­ரி­ழந்­துள்ளார்.

அவ­ரது சட­லத்தை அந்தப் பாரிய சிலையின் கீழி­ருந்து மீட்க மீட்புப் பணி­யா­ளர்கள்  கடும் போரா ட்­டத்தை எதிர்­கொள்ள நேர்ந்த­ தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது. அந்த சிலையை  பிராந்­தி­யத்தில் வசிக் கும் மக்­க­ளுக்கு சுபீட்­சத்­தையும் அதிர்ஷ்­டத்­தையும் தரு­வ­தற்­காக ஸ்தாபிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் சிலையை திறந்து ­வைக்கச் சென்ற மத­குரு அந்த சிலையை மூடி­யி­ருந்த துணியை இழுத்து அதனைத் திரை­நீக்கம் செய்து வைக்க முயன்றபோது அந்த சிலையின் அடித்­த­ளத்தில் விரிசல் ஏற்­பட்டு அந்தச் சிலை அவரின் தலையின் மீது விழுந்து அவரை தரை­யோடு தரை­யாக நசுக்­கி­யுள்­ளது.

சிலை திடீ­ரென சரிந்து விழு­வ தைப் பார்த்த அங்கு கூடி­யி­ருந்த மக்கள் பீதி­ய­டைந்து நாலா­பு­றமும் சித­றி­யோ­டி­ய­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

அந்த சிலை ஸ்தாபிக்­கப்­பட்­டி ­ருந்த கொங்­கிறீட் அடித்­தளம் உறு­தி­யற்று இருந்­ததே இந்த அனர்த்­தத்­திற்குக் காரணம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் மேற்­படி சம்­பவம் குறித்து பிராந்­திய பொலிஸார் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10