இந்தியா- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் பகலிரவு போட்டியில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி வர்ணனையாளராக செயல்பட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - பங்களாதேஷ் இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி, வரும் 22  ஆம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. ‌

இந்தப் போட்டிக்கு தோனியை சிறப்பு வர்ணனையாளராக அழைக்க, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டிருந்தது. இதற்கு இந்திய கிரிக்கெட் நிறுவனம் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், தோனி வர்ணனையாளராக செயல்பட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

அவர் இன்னும் ஓய்வு பெற்றுவிடவில்லை. இந்திய கிரிக்கெட்  ஒப்பந்த வீரராகத்தான் இருக்கிறார். வர்ணனையாளராக செயல்பட்டால், இரட்டை ஆதாய குற்றச்சாட்டு எழும் என்பதால் வர்ணனையாளராக செயல்படமாட்டார் என்று அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.