(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தேர்தலுக்கான  திகதி அறிவிக்கப்பட்டதில் இருந்து  தேர்தல் பெறுபேறு  வெளியாகும் வரையில் அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்டுள்ள  ஒப்பந்தங்கள்  தேசிய  பாதுகாப்பு, நாட்டின் உள்ளக இறை யாண்மை ஆகியவற்றிற்கு  பாதிப்பு  ஏற்படுத்துவதாக  காணப்படுகின்றதா என்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும்.    நாட்டுக்கு  பாதிப்புக்கள்  ஏற்படுத்தும் ஒப்பந்தங்கள்   நிபந்தனைகளின்றி   இரத்து செய்யப்படும்   என்று   மிலேனியம் செலன்ச் கோர்பரேஷன் ஒப்பந்திற்கு  எதிராக உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுப்பட்ட உடுதும்பர  காசியப்ப தேரருக்கு  பொஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ எழுத்து மூலமாக  அறிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 அமெரிக்காவின் மிலேனியம் செலன்ச் கோர்பரேஷன்  நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் அரசாங்கம்  கைச்சாத்திடுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து  கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உடுதும்பர காசிய்ப  தேர்ர்  முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டம் மதிக்கப்பட கூடியது.

அரசாங்கம் இதுவரையில் செய்துக் கொண்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத்தும் மீள் பரிசீலனை செய்யப்படும் என்றும்  நாட்டுக்கு பாதிப்பினை ஏற்படுத்துட்  ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும். ஆகவே தேர்ர்  போராட்டத்தினை  கைவிடுமாறு  கேட்டுக்கொள்கின்றேன்.

அரசாங்கம் மற்றும் பல்வேறு   தரப்பினர் விடுத்த கோரிக்களுக்கு  அமைய தேர்ர் நேற்று முன்தினம்  (05) ஆரம்பித்த போராட்டத்தை ஆரம்பித்த தினத்திலேயே  கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.