நீர்கொழும்பு வைத்தியசாலையில்  டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட 200 இற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவர்களில் 40 பேர் வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆவர். கம்பஹா மாவட்டத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் நீர்கொழும்பில் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 நீர்கொழும்பில் கடற்கரை தெரு, தளுபத்தை, தழுவகொட்டுவ, கொச்சிக்கடை,  பலகத்துறை, தக்கியா வீதி உட்பட பல பிரதேசங்களில் டெங்கு நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாகவும் அந்த அதிகாரி  மேலும் தெரிவித்தார். நீர்கொழும்பு வைத்தியசாலையில் இந்த வருடத்தில் டெங்குக் காய்ச்சலின் காரணமாக எட்டு பேர்  மரணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.