கடந்த முறை  நீங்கள் ஆட்சி மாற்­றத்தை உரு­வாக்கி ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்தி இன ஒற்­று­மைக்­கான வழியை ஏற்­ப­டுத்திக் கொடுத்­துள்­ளீர்கள், அதே­போன்று நவம்பர் 16ஆம் திகதி அதனை முன்­கொண்டு செல்­லப்­போ­கின்­றோமா அல்­லது அதனைச் சீர­ழிக்கப் போகின்­றோமா என்­ப­தனை சித்­தித்து வாக்­க­ளிக்க வேண்டும்  என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

 அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸினால் சம்­மாந்­து­றையில்  நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்ட இளைஞர் மாநாட்டில் பிரதம் அதி­தி­யா­க­க­க­லந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வுத்தார்.

அகில இலங்கை மக்கள்  காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மா­ன ­ரிஷாத் பதி­யுதீன் த்லைமையில் சம்­மாந்­துறை அப்­துல்­மஜீத் மண்­ட­பத்தில் நடை பெற்ற  நிகழ்வில் பிர­தமர்  தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

கிழக்கு மாகா­ணத்தின்  முத­ல­மைச்­ச­ரைத்­தீர்­மா­னிக்கும் பொறுப்பு அந்­த­மா­கா­ணத்தில் வாழும் மக்­களின் தீர்­மா­னத்­தி­லேயே உள்­ளது.  இதனை மஹிந்த ராஜ­ப­க்ஷவோ ரணில் விக்­ர­ம­சிங்­கவோ தீர்­மா­னிக்க முடி­யது.

ராஜ­ப­க்ஷவும், மொட்டு அணி­யி­னரும் இன­வா­தத்தை எதிர்­பார்க்­கின்­றனர். கிழக்கு மாகா­ணத்­துக்கு ஒரு தமிழ் முத­ல­மைச்சர் வேண்டும். நாங்கள் பிள்­ளை­யானை முத­ல­மைச்­ச­ராக்­குவோம்  என மஹிந்த ராஜ­பக்ஷ, கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஆகியோர் கூறு­கின்­றார்கள். கிழக்கு மாகா­ணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்­கள மக்கள் வாழ்­கின்­றனர். இங்கு முத­ல­மைச்­ச­ராக வரு­வ­தற்கு எந்த இன­மாக இருந்­தாலும் செயற்­றிறன் மிக்­க­வ­ராக இருக்க வேண்டும்.

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பாக   இளை­ஞர்கள் மிகத் தெளி­வாக இருக்க வேண்டும்.   2015 ஆம் ஆண்டு நாம் எல்­லோரும் இணைந்து ஏற்­ப­டுத்­திய புரட்­சியின் மூலம்  மஹிந்த ராஜபக்ஷ் குடும்­பத்­தைத்­தோற்­க­டித்து நாட்டில் ஜன­நா­ய­கத்தை உரு­வாக்கி

னோம். அந்த ஜன­நா­ய­கத்தை மீண்டும் அவர்­க­ளிடம் தொலைத்­து­வி­டு­வதா அல்­லது அந்த ஜன­நா­யக உரி­மை­களைப் பாது­காப்­பதா என்­பதை நீங்கள் தீர்­மா­னிக்க வேண்டும்.

மொட்டுக் கட்­சி­யினர் தெற்கில் ஒன்­றையும் வடக்கில் ஒன்­றையும் கிழக்கில் ஒன்­றையும்.பேசித்­தி­ரி­கின்­றனர் அண்­மையில் மட்­டக்­க­ளப்­புக்கு வந்த மஹிந்த ராஜ­பக்ஷ பிள்­ளை­யானை சந்­தித்து அவரை கிழக்கு மாகா­ணத்தின் முத­ல­மைச்­ச­ராக ஆக்­கு­வ­தாக உத்­த­ர­வாதம் வழங்­கி­யுள்ளர். கிழக்கு மாகா­ணத்தின் முத­ல­மைச்­ச­ராக அந்த மாகா­ணத்தில் வாழும் எவரும் வரலாம். அதில் யாருக்கும் ஆட்­சே­பனை இல்லை. ஆனால் பிள்­ளை­யானை தமிழ மக்கள் யாரும் விரும்­ப­வில்லை.  இந்த மாகா­ணத்தில் வாழும் சிங்­கள முஸ்லிம் தமிழ் மக்கள்  யாராக இருந்­தாலும்  ஒரு திற­மை­சாலி மக்கள் விரும்பும் ஒருவர் முதல்ச்­மைச்­ச­ராக ஆக முடியும்.  இதனை நானோ அல்­லது மஹிந்­தவோ தீர்­மா­னிக்க முடி­யாது.கடந்த ஐந்து ஆண்­டு­களில் நாம் நாட்டில் பாரிய சேவை­க­ளைச்­செய்­துள்ளோம்.எதிர்­கா­லத்தில் அம்­பாறை மாவட்டம் பல வழி­க­ளிலும் அபி­வி­ருத்தி செய்­யப்­படும் இளைஞர் யுவ­தி­களின் நன்மை கருதி தொழில் பேட்டை ஒன்றை அம்­பாறை மாவட்­டத்தில் உரு­வாக்க திட்­ட­மிட்­டுள்ளோம் சுற்­று­லாத்­து­றையும் அபி­வி­ருத்தி செய்­யப்­படும்.

மட்­டக்­க­ளப்பு கல்­முனை சம்­மாந்­துறை ஆகிய நக­ரங்கள் அபி­வி­ருத்தி செய்­யப்­படும்.  மட்­டக்­க­ளப்­பி­லி­ருந்து சென்­னைக்­கான நேரடி விமான சேவை விரைவில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இதன் மூலம் இப்­பி­ர­தேசம் பல நன்­மை­களை அடையும்.  இந்த மாகா­ணத்தில் நெல் மற்றும் அர்சி உற்­பத்­தியை அதி­க­ரிக்­க­வேண்டும் இதற்­காக விவ­சா­யி­க­ளிக்கு சலு­கைகள் வழங்­கப்­பட வேண்டும்.  அதே­போன்று மீன­வர்­களின் தேவை­களும் பூர்த்தி செய்­யப்­பட வேண்டும் அவ­ர­க­ளுக்கும் நவீன இயந்­தி­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும் எதிர் காலத்தில் இவை அனைத்­தையும் செய்ய வேண்­டு­மானால் எதிர் வரும் 16 ஆம் திகதி அன்னம் சின்­ன­திற்கு வாக்­க­ளித்து சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்து வெற்றி பெற்று நாட்டை முன்­னேற்ற இளை­ஞர்கள் முன்­வ­ர­வேண்டும் என தெரி­வித்தார்.

மாநாட்டில் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக பிர­தி­ய­மைச்­சர்­க­ளான  அப்­துல்லாஹ் மஹ்ரூப் அனோமா கமகே  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கலா­நி­தி  எஸ்.எம்.எம்.இஸ்­மாயில்   முன்னாள் ஆளு­னர்­க­ளான ரோஹித போகொல்­லா­கம அஸாத் சாலி  முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான  கே.எம்.ஏ.ரஸாக்  யூ.எல்.அமீர்   நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.தாஹிர் கல்முனை மாநகர சபை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர்களான எம்.ஏ.ஹஸன் அலி சட்டத்தரணி ஏ.எம்.ஏ.ரஸாக்   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் எம்.எஸ்.எம்.முஸர்ரப் ஆகியோர் உட்பட பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.