நெதர்லாந்தின் அம்ஸ்ரடாமிலுள்ள சிபோல் விமானநிலையத்தில் இருந்து விமானத்தை கடத்த போவதாக கிடைக்கப்பபெற்ற தவறான செய்தியால் விமானநிலையத்தில் மக்கள் பதற்றமடைந்து வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு விமானத்தைக் கடத்தப்போவதாக கிடைக்கப்பெற்ற வதந்தியை அடுத்து விமானநிலையத்தில் கூடியிருந்த பயணிகள் அனைவரும் பதற்றமடைந்த நிலையில், அவர்களை அங்கிருந்து நெதர்லாந்து பொலிஸார் உடனடியாக வெளியேற்றினர்.

விமானத்திற்காக காந்திருந்த  பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதை அடுத்து விமான நிலையம் பூட்டப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு வதந்தியால் ஏற்பட்ட பதற்ற நிலையை சீர் செய்ய விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகளை உடனடியாக முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டதோடு குறித்த வதந்தி எவ்வாறு பரப்பப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.