கொழும்பு - 2 பகுதியில் ஆண் ஒருவர் இனந்தெரியாதோரால் கொலைசெய்யப்பட்டதன் பின்னணியில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 02, ஸ்லேவைலன் சந்தி தர்மபால வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கொலைசெய்யப்பட்ட நபருடன் இடம்பெற்ற சண்டையின்போது ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை மேற்கொள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 49 வயதுடையவரெனவும் அவர் முன்னர் பொலிஸ் றக்பி அணிக்காக விளையாடியுள்ளதாகவும் அப்போது அவர் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேவேளை, குறித்த நபர் பின்னர் கொழும்பில் உள்ள பாடசாலையொன்றின் றக்பி அணி பயிற்சியாளராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM