ஹொங்கொங்கை சேர்ந்த ‘ஆரோன் ஷம்’ என்ற நகை நிறுவனம் தங்கம் மற்றும் வைர கற்களை பயன்படுத்தி ஆடம்பர கழிவறை கோப்பையை உருவாக்கி உள்ளது.

ஹொங்கொங்கை சேர்ந்த ‘ஆரோன் ஷம்’ என்ற நகை நிறுவனம் தங்கம் மற்றும் வைர கற்களை பயன்படுத்தி ஆடம்பர கழிவறை கோப்பையை உருவாக்கியுள்ளது. முற்றிலும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ள இந்த கழிவறை கோப்பையில் மனிதர்கள் அமரும் பகுதியில் 335 கேரட் எடையிலான 40 ஆயிரத்து 815 வைர கற்கள் பதிக்கப் பட்டுள்ளன.

வைரங்கள்  பொதியப்பட்டுள்ள  பகுதி ‘புல்லட் புரூப்’ எனப்படும் துப்பாக்கி குண்டு களால் துளைக்கமுடியாத கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது.12 இலட்சத்து 88 ஆயி ரத்து 677 அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த கழிவறை கோப்பை தற்போது சீனா வின் ஷாங்காய் நகரில் நடந்து வரும் 2ஆவது சர்வதேச இறக்குமதி கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த கழிவறை கோப்பையை விற்க மனமில்லை என்று கூறிய ‘ஆரோன் ஷம்’ நிறு வன உரிமையாளர் இதனை அருங்காட்சியகத்தில் வைக்க போவதாக தெரிவித்துள் ளார். 

மேலும் அவர் வைர கற்கள் பொதியப்பட்டுள்ள கழிவறை கோப்பை என்ற பிரிவின் கீழ் உலகின் ஆடம்பர கழிவறை கோப்பைக்கான கின்னஸ் சாதனைக்காக விண்ணப் பித்துள்ளார்.