கனேமுல்ல பகுதியில் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

கனேமுல்ல - ஹொரகொல்ல பகுதியில் வைத்தே 72 மற்றும் 73 வயதான இருவரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.