அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அருகில் வைத்து சிறைச்சாலை அதிகாரி ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 10 கிராம் ஹெரோயின் , 14 கிராம் கஞ்சா மற்றும் 27  போதை மாத்திரைகள் அடங்கிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.