பொதுச் சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைத்தமை மற்றும் அவரை அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட கரவெட்டி பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
“கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும் உம்மைத் தூக்குவேன்” என்று கரவெட்டி பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர் தன்னை அச்சுறுத்தினார் என்று பொது சுகாதார பரிசோதகர் நெல்லியடிப் பொலிஸில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் கொற்றாவத்தை என்ற இடத்தில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொற்றவத்தை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக்கம் தொடர்பில் சோதனை செய்வதற்கு கரவெட்டி பிரதேச சபை பொதுச் சுகாதார பரிசோதகர் நேற்றுமுன்தினம் அங்கு சென்றுள்ளார்.
அவர் கடமையைச் செய்ய விடாது கரவெட்டி பிரதேச சபையின் ஈபிடிபி உறுப்பினர் இடையூறு விளைவித்துள்ளார். ஒரு கட்டத்தில் கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும் உம்மைத் தூக்குவேன் என்று பிரதேச சபை உறுப்பினர் எச்சரித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகரால் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினரை அழைத்து விசாரித்த பொலிஸார், அவரைக் கைது செய்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த பருத்தித்துறை நீதிவான், பிரதேச சபை உறுப்பினரை ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவித்து வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM