(செ.தேன்மொழி)

ஜனாதிபதி தேர்தலில் 22 தேர்தல் தொகுதிகளில் 16 தொகுதிகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவே வெற்றிப் பெருவார் என்றும் அதில் 13 தொகுதிகளில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஒரு ஆசனங்கள் கூட கிடைக்காது என்றும் எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

வியத்மக காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தாங்கள் முன்னெடுத்த முதற்கட்ட பரிசீலனைக்கமைய 22 தேர்தல் தொகுதிகளில் 16 தேர்தர்தல் தொகுதிகளில் கோத்தாபயவே வெற்றிப்பெருவார். இவ்வாறு அவர் வெற்றிப் பெரும் தேர்தல் தொகுதிகள் 13 இல் சஜித்துக்கு ஒரு ஆசனங்கள் கூட கிடைக்காது. 

160 ஆசனங்களில் 119 ஆசனங்களையும் கோத்தாபயவே வெற்றிபபெருவார். இதன்போது 9 ஆசனங்களிலில் இருவருக்குமிடையில் கடுமையான போட்டிகள் நிலவும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 90 ஆசனங்களையே அன்னம் சின்னம் பெற்றிருந்தது. இந்நிலையில் எமது வேட்பாளர் கோத்தாபய வெற்றிப் பெருவது உறுதி.

இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரையிலும் இடம்பெறதாத வகையில் பெரும் மாற்றமொன்றினை எமது வேட்பாளர் கோத்தாபய இன்று முன்னெடுத்தார். அதாவது நாட்டின் அங்கவீனர்களை பிரதிநிதித்துவம்படுத்தும் மூன்று அமைப்புகளுடன் அவர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளார்.

கருண்ய குணம் மிக்கவரான எமது வேட்பாளர் அங்கவீனர்களுக்காக சிறந்த வேலைத்டதிட்டங்களையும் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியுள்ளார். உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் மாத்திரமே இவ்வாறு அங்கவீனர்கள் தொடர்பில் வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை எமது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்ட கொள்கைத்திட்டங்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளினூடாக இன்றிலிருந்து இணையத்தினூடாக பார்வையிட முடியும் என அவர் தெரிவித்தார்.