(சசி )

மட்டக்களப்பு  விகாரையின்  பீடாதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நஷீருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பூர் பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வின் போது கடற்படை அதிகாரி ஒருவரை மிக மோசமாக திட்டிய காரணத்தினால், முதலமைச்சருக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வேறு சிங்கள கிராமங்களில் இருந்து மக்கள்  வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.