இந்தியாவின் தமிழகத்தில் மேலதிக வகுப்பிற்கு படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த குறித்த மேலதிக வகுப்பின் ஆசிரியையும் அவரது ஆண் நண்பரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் சென்னை தியாகராய நகரை சேர்ந்தவர் சஞ்சனா வயது 28.  பட்டதாரியான இவர் வீட்டிலேயே மேலதிக வகுப்பு ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு சஞ்சனாதான் கற்பிக்கின்றார்.

இந்நிலையில் சஞ்சனாவுடன் சேர்ந்து அவரது நண்பர் பாலாஜி குறித்த மேலதிக வகுப்பிற்கு  வரும் மாணவ மாணவிகளை தனி அறையில் வைத்து, ஆபாச வீடியோ எடுத்துள்ளனர்.  இதுகுறித்து தப்பி வந்த மாணவி ஒருவர் தியாகராய நகர் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் பேரில் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த பொலிஸாரிடம் அவர்கள் கொடுத்த அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர்கள் இருவரது தொலைப் பேசிகளையும் பறித்து மேற்கொண்ட சோதனையில் மாணவ மாணவிகளின் ஆபாசப் படமும் வேறு சில படங்களும் இருந்துள்ளன. அதைத் தொடர்ந்து ஆசிரியையின் ஆண் நண்பர் பாலாஜி அளித்த வாக்குமூலத்தில்,  மாணவர்களின் ஆபாச படங்களை காட்டி அவர்களிடம் பணம் பறித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். பணம் தரமுடியாத மாணவிகளை பாலியல்  வன்கொடுமை செய்ததாகவும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை சஞ்சனா, இவ்வாறு நிர்வாணமாக வீடியோ, போட்டோ எடுத்துள்ளமை விசாரணையில் தெரியவந்தது.

பொள்ளாச்சியை போல், வீட்டுக்குள் அடைத்து வைத்து மாணவ மாணவிகளை பாலியல் கொடுமைபடுத்திய இந்த சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.