புத்தளம் பாலாவி பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது நேற்று அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலாவி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் மீதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளான குறித்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தனிப்பட்ட பகை காரணமாகவே குறித்த தாக்குதல் நடைப்பெற்றுள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் தொடர்பாக குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.