உத்தர பிரதேசத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை திட்டிய ஆசிரியர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரின் பல்கரான்பூர் பகுதியில் உள்ள ஆதர்ஷ் ஜந்தா பாடசாலையில் மாணவ மாணவிகளுக்கு சுகாதார முகாம் நடந்தது. 

இதில் சில மாணவர்கள், மாணவிகள் சிலரிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. அவர்களை ஆசிரியர் ஒருவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பாதுகாவலர்களை அழைத்து கொண்டு சென்று ஆசிரியர் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் உருட்டுக் கட்டைகளால் கடுமையாக தாக்கியதில் ஆசிரியர் தரையில் சுருண்டு விழுந்துள்ளார். அத்துடன் அந்த கும்பல் தாக்குதலை தொடர்ந்துள்ளது. ஆசிரியர் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.