மியன்மாரின் மாண்டலே பிராந்தியத்தில் இரு பஸ்கள் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 25 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

மாண்டலே பிராந்தியத்தின் தபேக்கியின் டவுன்ஷிப் என்ற இடத்திலேயே இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

கச்சின் மாநிலத்தின் 'Shwegu township' என்ற இடத்தை நோக்கி மேற்படி இரு பஸ்களும் பயணித்துள்ளன. 

இதன்போது ஒரு பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து க்யூக்கி என்ற கிராமத்திற்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

முன்னால் விபத்துக்குள்ளான பஸ்ஸுடன்  விபத்திற்குள்ளாகாமல் தடுக்க பின்னால் வந்த பஸ் முயன்றபோது துரதிர்ஷ்டவசமாக அருகிலிருந்த மரத்துடன் மோதியபோது குறித்த பஸ் வண்டியும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த இரு விபத்துக்களிலும் சிக்கி இரண்டு பிக்குகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததுடன் மேலும் காயமடைந்த 25 பேர் க்யூக்கி மற்றும் தபீக்கின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.