சந்­தி­ரி­காவின் தீர்­மானம் எமக்கு சவா­லில்லை  - வாசு­தேவ

06 Nov, 2019 | 04:04 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

வாக்­குப்­பலம் இல்­லாத சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் தீர்­மானம் ஒரு­போதும் எமக்கு சவா­லில்லை. அமெ­ரிக்­காவின் ஒப்­பந்­தங்­களை நிறை­வேற்­றிக்­கொள்­ளவே இவர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்­தி­ருக்­கின்­றனர் என ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­ப­தியும் ஸ்ரீலங்கா சுதந்­திரத் கட்­சியின் ஆலோ­ச­க­ரு­மான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் ஒப்­பந்தம் செய்­து­கொண்டு ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி உறுப்­பி­னர்­களை ஒன்­றி­ணைக்க மேற்­கொள்ளும் வேலைத்­திட்டம் குறித்து குறிப்­பி­டு­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,

சந்­தி­ரிகா குமா­ர­துங்க எப்­போதும் அமெ­ரிக்­காவின் தேவையை நிறை­வேற்­று­வ­தற்கே செயற்­பட்டு வந்­தி­ருக்­கின்­றார். தற்­போதும் சஜித் பிரே­ம­தா­சவை ஜனா­தி­ப­தி­யாக்கி அவரை பொம்­மை­யாக நிறுத்­து­வதே இவர்­களின் திட்டம். அதன் மூலம் அமெ­ரிக்­காவின் மிலே­னியம் செலன்ஞ் கோப்­ப­ரேஷன், சோபா ஒப்­பந்தம் போன்­ற­வற்றை நிறை­வேற்­றிக்­கொள்ள இவர்கள் முயற்­சிக்­கின்­றனர். அதற்­கா­கவே சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் அவர்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­கின்றார்.

சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வுக்கு கடந்த காலங்­களில் இருந்த மக்கள் செல்­வாக்கு இல்லை. எமக்கு சவால் விடுக்கும் வகையில் அவ­ருக்கும் வாக்­குப்­ப­லமும் இல்லை. அதனால் அவர் எமக்­கெ­தி­ராக கூட்­டணி அமைத்­தாலும் அவரின் நட­வ­டிக்கை ஒரு­போதும் எமது பொது­ஜன பெர­முன ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷவுக்கு சவா­லா­கப்­போ­வ­தில்லை.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குமார வெல்­கம சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வுடன் இணைந்து செயற்­ப­டு­கின்றார். பொது­ஜன பெர­மு­னவை தோற்­க­டிக்­க­வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிலேயே இருக்­கின்றார். அவர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கோ கோத்­த­பாய ராஜ­பக் ஷவுக்கோ வாக்­க­ளிப்­ப­தில்லை என தெரி­விக்­கின்றார். ஆனால் அவர் சந்­தி­ரி­கா­வுடன் இணைந்­து­கொண்டு எமக்­கெ­தி­ராக செயற்­ப­டு­கின்றார்.

எனவே சந்­தி­ரிகா குமா­ர­துங்க என்ன சதித்­திட்­டங்­களை மேற்­கொண்­டாலும் அவரின் செயற்பாடுகள் ஒருபோதும் எமக்கு சவாலாகப்போவதில்லை. ஏனெனில் சந்திரிகா குமாரதுங்கவுக்கு மக்கள் பலமோ வாக்குப்பலமோ இல்லை. அத்துடன் குமார வெல்கம தொடர்ந்து அவருடன் இருந்தால் பாரிய கஷ்டத்துக்கு முகம்கொடுக்க நேரிடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right