சீனாவின் குயிலின் நக­ரி­லி­ருந்து யங்­ஸொயு நக­ருக்கு பய­ணித்த  பய­ணிகள் விமா­னத்தில்  விமா­னிக்­கான அறைக்குள் பிர­வே­சித்த பெண் பய­ணி­யொ­ருவர் புகைப்­ப­ட­மெ­டுத்து இணை­யத்­த­ளத்தில் வெளியிட்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து அந்த விமா­னத்தின் விமா­னிக்கு விமா­னத்தைச் செலுத்­து­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட பெண் பயணி  விமா­னி­க­ளுக்­கான அறையில் தான் இருப்­பதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டத்­துடன்  தான் இது குறித்து பெரிதும் மகிழ்ச்­சி­ய­டை­வ­தா­கவும் அதற்­காக விமா­னிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு செய்தியொன்றை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் ஜனவரி மாதம் எடுக்கப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த அறிக்கையில் விமானி விமான பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.