கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனித அந்தோணி மாவத்தையில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் வெளிநாட்டு பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கொள்ளுபிட்டிய பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 37 வயதுடைய குறித்த வெளிநாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.  

இவரிடமிருந்து சட்ட விரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 7200 சிகரெட்டுகள் மீட்க்கப்பட்டுள்ளன.  

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுபிட்டிய பொலிசார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.