பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துட்டகைமுனு மாவத்தையில் பேலியகொடை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 674 கிலோகிராம் கழிவு தேயிலையுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெளம்பட பிரதேசத்தை சேர்ந்த 37 மற்றும் 53 வயதுடைய சந்தேக நபர்களே இதன் போது கைதுசெய்யபப்ட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.