சக்தி பொலிமர் தயாரிப்புகள் தற்போது Euro aqua Link மூலம் இலங்கையில்

26 May, 2016 | 11:31 AM
image

தரமான PVC பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் குழாய் பொருத்திகளை உற்பத்தி செய்யும் சக்தி பொலிமர், இந்திய நிறுவனமானது தமது, உற்பத்திகளை இலங்கையில் சந்தைப்படுத்துவதற்கு Euro aqua Link Pvt.(Ltd) நிறுவனத்தை இலங்கையில் நிறுவியுள்ளது.

Euro aqua Link Pvt.(Ltd) இன் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு 12.05.2016 அன்று வெள்ளவத்தை குளோபஸ் டவர், மெரின் ட்ரைவ் ஹோட்டலில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் Chamber of construction industry, Srilanka  வின் தலைவர் தேசபந்து சூரத் விக்ரமசிங்க (Surath Wickramasinhe) பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக Pipe- Head Indian sub- Continent Borouge pvt (ltd), Abdudhabi, UAE கௌரவ G.D. சுக்லா மற்றும் சக்தி நிறுவனத்தின் (இந்தியா) நிறுவனர் P. மோகன், லக்ஸ்மி பொலிமர் நிறுவனத்தின்நிறுவுனர் இளங்கோ (இந்தியா)  உள்ளிட்ட இந்தியாவை சேர்ந்த பலரும் Colonial Group of Companies Chirman P. நடராஜா அவர்களும் Euro aqua Link Pvt.(Ltd) நிறுவனத்தின் (CEO) மகேந்திரன் மற்றும் பொது முகாமையாளர் முத்துகுமரேசன் உள்ளிட்ட இன்னும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். 

அந்நிகழ்வில் சக்தி பொலிமர் நிறுவனத்தின் நிறுவுனர் 

பி. மோகன் உரையாற்றுகையில் 

"இலங்கை ஒரு அழகான நாடு இங்கு தற்போது அமைதியான நல்ல சூழல் காணப்படுகின்றது. ஆகையினாலேயே இந்திய மக்களுக்கு வழங்கும் எமது தயாரிப்புகளை எமது சகோதர இலங்கை மக்களுக்கும் வழங்க வேண்டுமென்று எண்ணினோம் அதன் விளைவாகவே EUAOAQUA LINK நிறுவனத்தை ஆரம்பித்து அதனூடாக எமது தயாரிப்புகளை இலங்கை முழுவதும் விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம்.

எமது தயாரிப்புக்களான பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் குழாய் பொறுத்திகளானது அதிநவீன முறையில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பான நீடித்து உழைக்கக்கூடியவைகளாகும் . எனவே இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள் இனி எமது தயாரிப்புக்களை நியாயமான விலைகளில் தமது விருப்பத்துக்கேற்ப தெரிவுசெய்து பயன்பெறலாம்.

எமது தயாரிப்புக்களான குழாய்கள் மற்றும் பொருத்திகள் குளிர் மற்றும் வெண்ணீர், வாயு மற்றும் இரசாயன வகைகளை பயன்படுத்தும் வகையில் தரமான முறையில் தயாரிக்கப்பட்டவையாகும்.  இனி எமது தயாரிப்புகள் இலங்கை சந்தையிலும் வாடிக்கையாளர்களின் மனதை கவர்ந்து சாதனை படைக்கும் என்றார்.

இந்நிகழ்வில் உரையாற்றி Euro aqua Link நிறுவனத்தின் பொது முகாமையாளர் எஸ். முத்துகுமரேசன்

"சக்தி பொலிமர் நிறுவனத்தின் தயாரிப்பான பிளாஸ்டிக் (PVC) குழாய்கள் மற்றும் குழாய் பொருத்திகளானது இந்தியாவில் பிரசித்தி பெற்ற தயாரிப்புகளாக விளங்குகிறது. அவ்வாறான பிரபல்யமிக்க தரமான சிறந்த தயாரிப்புக்களை இனி எமது வாடிக்கையாளர்களும் தமது விருப்பத்துக்கு ஏற்ற வகையில் நியாயமான விலைகளில் கொள்வனவு செய்து பயனடையலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58