நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று  இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிறுவன் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

 

நீர்கொழும்பு  மினுவாங்கொட   பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்றுள்ளதாக கந்தானை  பொலிசார் தெரிவித்தனர்.

மாத்தறை பகுதியை சேர்ந்த  52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாதசாரி மீது பொலவலான நோக்கி சென்ற மோட்டார்சைக்கிள் மோதியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மற்றும் பாதசாரி ஆகியோர் நீர்கொழும்பு வைத்திய சாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் பாதாசரி  உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

குருணாகல்

இதேவேளை  குருணாகல் கண்டி பிரதான வீதியின் 9ம் கட்டை பகுதியில் லொறியுடன் முச்சக்கர வண்டி மோதியதில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக மாவத்தகமை பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் பலத்த காயங்களுக்குட்பட்ட முச்சக்கர வண்டி சாரதி மாவத்தகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தில் கணேகொட பகுதியை சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  விபத்து தொடர்பில் லொரி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் மாவத்தகமை பொலிசாரால் முன்னெடுக்கப்படுகின்றன. 

மெதமஹாநுவர 

இதேவேளை மெதமஹாநுவர பம்பரகஸ் ஓயா பலத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி பாதையை விட்டு விலகி கால்வாயில் விழுந்ததில் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவரும் முச்சக்கர வண்டி சாரதியும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில்  மெதமஹாநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக உடுதும்பர பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் மெதமஹாநுவர பகுதியை சேர்ந்த 49 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார்.  விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலீசார் முன்னெடுத்துள்ளனர்.

சபுகஸ்கந்த 

இதேவேளை சப்புகஸ்கந்த பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட களனி பியகம பிரதான வீதியில் முச்சக்கர வண்டி சொகுசு வாகனமொன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் பலத்த காயங்களுக்கு உட்பட்ட நிலையில் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக சப்புகஸ்கந்த பொலிசார் தெரிவித்தனர்.

விபத்தில் நெல்லியத்த பகுதியை சேர்ந்த 36 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.  சொகுசு வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சப்புகஸ்கந்த பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.