2019 ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குப் பெட்டிகளை எடுத்துக் செல்வதற்காக 1100 பஸ்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய குறித்த பஸ்கள் மேற்படி நடவடிக்கைக்காக பயன்படுத்தவுள்ளதாக அந்த சபையின் பிரதி முகாமையாளர் பி.எச்.ஆர்.டி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.