முள்­ளி­­வாய்க்­காலில் ஒன்­றரை இலட் சம் மக்கள் கொல்­லப்­பட கார­ண­மான வேட்­பா­ளரை மாற்றுக் கட்சி கள­மி­றக்­கி­யுள்­ளது. எனவே வடக்கு–கிழக்கில் மக் கள் புரிந்து வாக்­க­ளிக்க வேண்டும் என்று கல்வி இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்தார்.

வவு­னியா நக­ரப்­ப­கு­தியில் உள்ள விருந்­தினர் விடுதி ஒன்றில் நேற்று இடம்­பெற்ற மகளிர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

குறித்த மாநாட்டில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம ­தா­சவின் பாரியார் ஜலனி, கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேன­நா­யக்க, வட­மா­காண சபை முன்னாள் உறுப்­பி­னரும் அமைச்சர் றிசாத் பதி­யு­தீனின் இணைப்­பா­ள­ரு­மான றிப்கான் பதி­யுதீன், மகளிர் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட பலரும் கலந்துகொண்­டனர்.

அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், வடக்கு மாகா­ணத்தில் உள்ள மக­ளிரில் 99 வீத­மா­ன­வர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். ஆகையால் எமது வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­பதி ஆனதும் வடக்கு– கிழக்கில் இருக்கும் மக­ளிரை முன்­னேற்றப் போகிறார். ஏனைய மாகா­ணங்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது வடக்கு–கிழக்கு மாகாணம் 30 வருடம் யுத்­தத்தை எதிர்­கொண்ட மாகாணம். எமது பெண்கள் இறுதி யுத்­தத்தின் போது தமது உற­வுகள், உட­மைகள் எல்­லா­வற்­றையும் இழந்து மாற்றுத் திற­னா­ளி­க­ளாக உள்­ளனர்.

இது சர்­வ­தேசம் அறிந்த உண்மை. எமது ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்கம் கடந்த வரவு செலவுத் திட்­டத்தில் பெண்­க­ளுக்­காக நிதி­களை ஒதுக்­கி­யது. காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­லகம் திறக்­கப்­பட்ட போதும் அவர்­க­ளுக்­கான தீர்வு இன்னும் கிடைக்­க­வில்லை.

காணாமல் போனோர் தொடர்பில் தீர்­வு காண வேண்டும் என எங்­களு­டைய சஜித் பிரே­ம­தா­ச­விடம் நாம் வலி­யு­றுத்திக் கூறி வரு­கின்றோம். பெண்­க­ளுக்கான வாழ்­வா­தாரம், வீட்­டுத்­திட்டம், நுண்­கடன் திட் டம் என்­பன தொடர்­பிலும் நாம் கவனம் செலுத்தி வரு­கின்றோம். இவற்­றுக்­கான நிதி எமது அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. இதனை நூற்­றுக்கு நூறு வீதம் வழங்க வேண்டும்.

வடக்கு–கிழக்கில் 90 ஆயிரம் குடும் பங்கள் பெண்­களை தலை­மைத்­து­வ­மாக கொண்ட குடும்­பங்­க­ளாக காணப்­படுகின் றன. கண­வனால் கைவி­டப்­பட்ட குடும் ­பங்­களின் எண்­ணிக்­கையும் அதி­கரித்து வரு­கி­றது.

படித்து பல பெண்கள் வேலைக்கு அலை­வதை காணக்­கூ­டி­ய­தா­க­வுள்ளது. பெண்­க­ளுக்­கான கைத்­தொழில் பேட்டை கள் ஆரம்­பிக்­கப்பட வேண்டும். சஜித் பிரே­ம­தாச ஆட்­சிக்கு வந்­ததும் ஒவ்வொரு பிர­தேச செய­லகங்­க­ளிலும் கைத்­தொழில் பேட்­டைகள் ஆரம்­பிக்­கப்படும்.

முள்­ளி­வாய்க்­காலில் ஒன்­றரை இலட் சம் மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இதற் குக் கார­ண­மான வேட்­பா­ளரைத்தான் அடுத்த கட்­சியில் கள­மி­றக்­கி­யுள்­ளனர். இதில் பாதிக்­கப்­பட்ட ஒவ்­வொரு குடும்­பமும் இருக்­கி­றது. எமது மக்கள் அவரால் ஏதோ­வொரு விதத்தில் பாதிக்­கப்பட்டுள் ­ளார்கள். கடைசியாக வெள்ளை வானாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகை யால் நீங்கள் விழிப்பாக இருக்க வேண் டும். ஆகவே எங்களுடைய வாக்கினை நாம் சரியாக பயன்படுத்தி முழுமையாக வடக்கு, கிழக்கில் ஐக்கிய தேசிய முன் னனியின் வேட்பாளருக்கு வழங்க வேண் டும் எனத் தெரிவித்தார்.