இனப்­பி­ரச்­சி­னைக்­கு­ரிய தீர்வு அர­சி­ய­ல­மைப்பில் தங்­கி­யி­ருக்­க­வில்லை; கட்­சி­களின் அர­சியல் கொள்­கை­க­ளி­லேயே தங்­கி­யுள்­ளது - ஓர் ஆய்வு

Published By: R. Kalaichelvan

06 Nov, 2019 | 12:21 PM
image

(கே.ஜீ.ஜோன்)

ஜனாதிபதித் தேர்தல் நெருங்க நெருங்க இன முரண்­பா­டு­களை பெரும்­பான்மைக் கட்­சிகள் கிளறத் தொடங்­கி­யுள்­ளன. சென்­ற­வாரம் தொலைக்­காட்­சியில் ஒரு அர­சியல்  கட்­சியின் தலைவர் பௌத்த மத பீடத்தின் பிர­தம குரு­விடம் சிறு­பான்மைக் கட்­சிகள் வைத்­துள்ள கோரிக்­கையைச் சுட்­டிக்­காட்­டி­யதை நான் பார்த்தேன். அப்­போது முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ஹக்கீம் கோரிக்கை முன்­வைப்­பது தவறு இல்லை என்றும் அதனை வழங்­கி­யி­ருந்­தா­லேயே அது பற்றி தர்க்­கிக்க வேண்டும் என்றும்  சுடச் சுட பதில் கூறினார். விசே­ட­மான அவ­ரது பதிலை எல்­லோரும் மெச்ச வேண்டும்.

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஒருவர் இன்று என்­னுடன் கதைக்­கும்­போது சிறு­பான்­மை­யினர் முன்­வைத்­தி­ருக்கும் 13 அம்சக் கோரிக்கை மிக அதி­க­மா­ன­தல்­லவா என்று கேட்டார். நான் கூறிய பதில் என்­ன­வெனில் என்னால் அதனை ஒத்­துக்­கொள்ள முடி­யாது என்­றாகும். இவ்­வாறு பட்டி தொட்டி எல்லாம் தற்­போது தமிழ்ப் பிர­தி­நி­திகள் முன்­வைத்­துள்ள 13 அம்சக் கொள்கை நாட்டைப் பிரித்­து­விடப் போகி­றது என்­பது போல் கதைப்­ப­தையும் நாம் காணக்­கூ­டி­ய­தா­யி­ருக்­கி­றது. இதில் ஒன்று மட்டும் உண்­மை­யாகும். மற்­றவர் இதனை விமர்­சிப்பர் என்­ப­தற்­கா­கவோ அல்­லது தான் சேர்ந்த கட்சி தோற்­க­டிக்­கப்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு இதனால் ஏற்­பட்டு விடும் என்­ப­தற்­கா­கவோ நடை­பெற முடி­யாத ஒன்றை நடை­பெறும் என்று ஏற்­றுக்­கொள்ளக் கூடாது என்­ப­தாகும்.

சிறு­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் பெரும்­பான்மை இன அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் இடையில் மேலே கூறிய விமர்­சனம் இம்­முறை மட்­டு­மல்ல,  இதற்கு முன்­னரும் பல தடவை நடந்­துள்­ளதை நாம் காணலாம். ஆனால் அவற்றால் ஆகிய பலன் ஒன்­றுமே இல்லை என்றே கூற வேண்டும். இதனை விப­ர­மாக பின்­வ­ரு­மாறு கூறலாம்.

தற்­போது யுத்­தத்தால் பிரச்­சி­னைகள் தீர்க்­கலாம் என்ற எண்ணம் மழுங்கிப் போய்­விட்­டது. அதற்குப் பதி­லாக இனப்­பி­ரச்­சி­னையை அர­சியல் ரீதி­யாகத் தீர்க்க வேண்­டு­மென்ற எண்ணம் வலு­வ­டையத் தொடங்­கி­யுள்­ளது. ஆயினும் இச் சந்­தர்ப்­பத்தில் இதற்கு முன்னர் இப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்க அர­சியல் ரீதி­யாக நடை­பெற்ற நிகழ்ச்­சி­களை ஓர­ளவு பார்ப்­பது நல்­லது.

பண்­டா­ர­நா­யக்க – செல்­வ­நா­யகம்  ஒப்­பந்தம்

உக்­கிரம் அடைந்­துள்ள இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­காக பிர­தமர் பண்­டா­ர­நா­யக்கவும் தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர்   எஸ்.ஜே.வி. செல்­வ­நா­யகமும் பல தடவை மேற்­படி பிரச்­சி­னையைப் பற்றிப் பேசினர்.

பேச்­சு­வார்த்­தை­யின்­போது ஆரம்­பத்தில் சமஷ்டி கட்­சியின் சில கோரிக்­கை­களை ஏற்­றுக்­கொள்ளும் நிலையில் பிர­தமர் இல்லை என்­பது வெளிப்­ப­டை­யாகத் தெரிந்­தது.

சமஷ்டி ஆட்சி அமைப்பை ஏற்­ப­டுத்­தவோ தமிழ் பகு­தி­க­ளுக்கு சுயா­தீ­ன­மான ஆட்­சியை அளிப்­ப­தற்கோ சிங்­களம் மட்டும் சட்­டத்தை ரத்­துச்­செய்­யவோ தான் ஆயத்தம் இல்லை எனவும் அவை தனது கட்சிக் கொள்­கைக்கு முர­ணா­னது எனவும் அவர் பகி­ரங்­க­மாகக் கூறினார்.

அப்­போது எழுந்த பிரச்­சினை என்­ன­வெனில், சமஷ்டி கட்­சியின் அடிப்­படைக் கொள்­கையில் இருந்து வெளி­யே­றா­மலும் தங்­க­ளது கோரிக்­கையை சாக­டிக்­கா­மலும் தங்­க­ளது கோரிக்­கை­களை மாற்­றக்­கூ­டிய வழிகள் உள்­ள­னவா என ஆலோ­சிக்­கு­மாறு சமஷ்டி கட்­சி­யிடம் கோரிக்­கையை வேறு வழியில் வைக்க முடிமா என்று ஆலோ­சிக்­கு­மாறு பிர­தமர் சமஷ்டிக் கட்­சி­யிடம் வேண்­டுகோள் விடுத்தார்.

சமஷ்டி கட்­சியின் கோரிக்­கையை வேறு­வ­ழியில் செய்ய முடி­யு­மா­வென்று ஆலோ­சிக்­கு­மாறும் விசே­ட­மாக, மாவட்ட சபை முறையை ஏற்­றுக்­கொள்­ளு­மாறும் பிர­தமர் தனது பதி­லீட்டு ஆலோ­ச­னை­யாக மாவட்ட சபை அமைப்பை முன்­வைத்தார்.

தமிழ்­மொழி பிரச்­சினை

அர­சாங்க பாஷை அல்­லது உத்­தி­யோ­க­பூர்வ மொழி பிரச்­சி­னையில் பிரச்­சி­னை­யுள்­ளது என்பதை பண்­டா­ர­நா­யக்க ஏற்­றுக்­கொண்டார். ஆனால் அதற்­காக ஆக்­கப்­பட்ட சட்­ட­மான சிங்­கள மட்டும் சட்­டத்தை ரத்துச் செய்­யாமல் வடக்கு –கிழக்கு மாகா­ணங்­களில் வாழு­கின்ற தமிழ் பேசும் மக்­களின் பாஷையை அப்­ப­கு­தி­களின் உத்­தி­யோக மொழி­யாக ஏற்­றுக்­கொள்ள உடன்­பட்டார். தற்­போது சிங்­களம் மட்டும் சட்­டமும் தமிழ் உத்­தி­யோக மொழி சட்­டமும் அமுலில் உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

டட்லி சேனா­நா­யக்க – செல்­வ­நா­யகம் ஒப்­பந்தம்–1965

1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி டட்லி சேனா­நா­யக்கவும் தலைவர் செல்­வ­நா­யகமும் ஒரு உடன்­ப­டிக்­கையைச் செய்­து­கொண்­டனர். பின்­வரும் ஆலோ­ச­னை­களை டட்லி சேனா­நா­யக்க அவர்கள் ஏற்­றுக்­கொண்டார்.

1)வடக்கு – கிழக்கு மாகா­ணங்­களில் நிர்­வாகம் மற்றும் உத்­தி­யோ­கபூர்வ அறிக்­கைகள் சம்­பந்­த­மாக வடக்கு – கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் மொழி உப­யோகம் சம்­பந்­த­மாக விசேட சட்டம் ஒன்று இருக்க வேண்­டு­மென டட்லி சேனா­நா­யக்க  ஏற்­றுக்­கொண்டார். (நிரு­வாக மொழி)

2)வடக்கு –கிழக்கு  மாகா­ணங்­களின் நீதி நிரு­வாக மொழி எவ்­வாறு இருக்க வேண்டும் என்­பது பற்றி ஆலோ­சித்து நீதி நிர்­வாக மொழி­யாக வடக்கு – கிழக்கு மாகா­ணங்­களில் தமிழ் மொழியே நீதி நிரு­வாக மொழி­யாக இருக்க வேண்டும் என்­பதை டட்லி சேனா­நா­யக்க   ஏற்­றுக்­கொண்டார்.

3)இரு பகு­தி­யாரும் ஒத்­துக்­கொண்ட இன்னும் ஒரு தீர்­மானம் மாவட்ட சபைகள் அமைப்­ப­தாகும். மாவட்ட நிரு­வாகம் மாவட்ட சபை­யி­டமே இருக்­க­வேண்டும் என்­பது ஒத்­துக்­கொள்­ளப்­பட்­டது. ஆனால் மாவட்ட அமைச்சு ஒன்று இருக்க வேண்டும் என்றும் அதற்கு மாவட்ட நிரு­வாக அமைச்சர் ஒருவர் இருக்க வேண்டும் என்­பதும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

4)காணிக் கட்­டளைச் சட்டம் திருத்­து­வதற்கு ஒத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இலங்கை பிர­ஜை­க­ளுக்கு அரச காணியை பகிர்ந்­த­ளிக்க முன்­னு­ரிமை கொடுக்­கு­மு­க­மாக மேற்­படி காணிக் கட்­டளைச் சட்டம்  திருத்­து­வ­தற்கும் ஒத்துக் கொள்ளப்பட்­டது.

மேலும் அரச காணி சம்­பந்­த­மாக பின்­வரும் நிபந்­த­னை­களும் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டன.

அ) வடக்கு – கிழக்கில் உள்ள அரச காணிகள் முதலில் வடக்கு – கிழக்கு மாகா­ணங்­களில் வசிக்கும் வடக்கு – கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கே முன்­னு­ரி­மை­யாக வழங்­கப்­பட வேண்டும் என்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

ஆ) வடக்கு – கிழக்கு மாகா­ணங்­களில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட வேண்டும் என்­பது ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது.

இ) இலங்­கையின் ஏனைய பகு­தி­களில் வாழும் தமி­ழ­ருக்கும் மற்றும் இலங்கைப் பிர­ஜை­க­ளுக்கும் காணி அளிக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதும் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது.

இலங்­கையில் அமை­தி­யான பொது­ வாழ்­வையும் சமா­தா­னத்­தையும்  ஏற்­ப­டுத்­து­கின்ற இந்­திய – இலங்கை  ஒப்­பந்தம்

மேலே காட்­டி­ய­வாறு டட்­லி–­செல்­வ­நா­யகம், பண்­டா­ர­நா­யக்க– செல்­வ­நா­யகம், ஆகி­ய­வர்­களின் ஒப்­பந்தம் எதிர்­பார்த்த பலனை அளிக்­க­வில்லை. எதிர்க்­கட்­சி­யினர் கூறி­யது என்­ன­வெனில், இந்­நாட்டை தமி­ழர்­க­ளுக்கு அடகு வைத்து விட்­டார்கள் என்றும் வடக்கு –கிழக்கு மாகா­ணங்கள் இணைந்து இலங்­கையை இரண்­டாகப் பிரிக்­கப்­போ­கி­றார்கள் என்றும் மற்றும் அதை­யொத்த பிழை­யான தக­வல்­களை வழங்கி வடக்கு – கிழக்கில் நிரந்­த­ர­மாக அமை­தியை ஏற்­ப­டுத்த எதிர்க்­கட்­சிகள் இடம் கொடுக்­காமல் குழப்­பத்தை விளை­வித்து கொண்டே இருந்­தன. இதனால் இலங்­கையில் வகுப்பு வாத கிளர்ச்சி ஏற்­பட்­டுக்­கொண்டே இருந்­தது. இந்­நிலை இலங்­கையில் தொடர அனு­ம­திப்­பது தவறு என்றும் இந்­திய நாட்­டுக்கும் தீய­தா­கவே அமையும் என்­பதால் இந்­நி­லையை மாற்ற இலங்­கை­யுடன் அர­சியல் தீர்வு ஒன்றை கொண்­டு­வர தன்னால் ஆன முயற்­சியைச் செய்­தது. இதனால் இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் ஏற்­பட்­டது.

இலங்கை இந்­திய ஒப்­பந்தம் பற்றி சில விட­யங்­களை ஒவ்­வொ­ரு­வரும் அறிந்­தி­ருக்க வேண்­டி­யது ஏன்?

பலர் பல்­வேறு வித­மாக இவ் இலங்கை –இந்­திய ஒப்­பந்­தத்தை விமர்­சிக்­கின்­றனர். ஆகவே இவ் ஒப்­பந்­தத்தில் உள்ள விட­யங்கள் அனைத்­தையும் ஒருவர் இல­குவில் மனதில் வைத்­தி­ருக்­க­மு­டி­யாது. ஆகவே முக்­கி­ய­மான சில விட­யங்­கள் மட்டும் இங்கு கூறப்­பட்­டுள்­ளது.

மாகாண சபைகள் அமைக்­கப்­ப­டுதல்

இலங்­கையின் ஆட்சி அதி­காரம் பாரா­ளு­மன்­றத்­திற்கே உரி­யது என்றும் அவ்­வ­தி­காரம் தேவை­யான விட­யத்தில் மாகாண மட்­டத்­திற்கு பர­வ­லாக்கம் செய்­யப்­ப­ட­வேண்டும் என்றும் அதற்கு வச­தி­யாக இலங்­கையில் மாகாண சபைகள் அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்­பது இலங்கை– இந்­திய ஒப்­பந்­தத்தில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விட­ய­மா­கி­யது.

ஒவ்­வொரு மாகா­ணத்­திற்கும் ஒவ்­வொரு மாகாண சபை அமைய வேண்­டு­மென்­பதும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­போது வடக்கு –கிழக்கு மாகாண மக்­களின் மொழி, கலை, கலா­சாரம், பாரம்­ப­ரிய பண்­பாடு என்­பன பெரும்­பாலும் ஒன்­றாக இருப்­பதால் அவ் இரண்டு மாகா­ணங்­களும் அம்­மா­கா­ணங்­களின் மக்­க­ளது விருப்பம் அறி­யப்­படும் வரையும் ஒரு மாகாண சபைக்குள் இயங்­க­வேண்­டு­மென்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

பல வரு­டங்­களின் பின்னர் இவ் இரண்டு மாகா­ணங்­களும் இரண்டு  மாகா­ணங்­க­ளாகக் குறிப்­பி­டப்­பட்டு இரண்டு மாகாண சபை­க­ளுக்குள் கொண்டு வரப்­பட்­டன. இதனால் இலங்கை –இந்­திய ஒப்­பந்­தப்­படி ஒரே மாகாண சபையின் கீழ் இயங்­கிய வடக்கு –கிழக்கு மாகா­ணங்கள், தனித் தனி­யாக வட மாகாண சபை, கிழக்கு மாகாண சபை என இரண்­டாகப் பிரிந்து இயங்கி வரு­கி­றது.

மாகாண சபை­களின் அதி­கா­ரங்கள்

அரசின் அதி­கா­ரங்கள் மூன்று நிரல்­க­ளாகப் பிரிக்­கப்­பட்டு ஒவ்­வொரு நிரல்­க­ளிலும் அவை குறிப்­பி­டப்­பட்­டன. இந்தக் கட்­டு­ரைக்குத் தேவை­யான நிரல் மாகாண சபை நிர­லாகும். ஆகவே மாகாண சபை நிர­லுக்குள் எவை அடங்­கு­கின்­றன என்­ப­வற்றை மட்­டுமே குறிப்­பிட்­டுள்ளேன்.

1) பொலிஸ் நிரு­வா­கமும் மக்கள் பாது­காப்பும் மாகாண சபை­யிடம் வழங்­கப்­பட்­டது.

2) மாகாண மட்­டத்தில் உள்ள பொரு­ளா­தாரத் திட்­டங்­களை அமுல்­ப­டுத்தும் அதி­கா­ரங்கள் மாகாண சபைக்கு உரித்­தாக்­கப்­பட்­டது.

3) குறிக்­கப்­பட்ட வரை­ய­றைக்குள் வரும் கல்விச் சேவை மாகாண சபை­யிடம் ஒதுக்­கப்­பட்­டது.

4) உள்­ளூ­ராட்சி சபை­களின் நிரு­வாகம் மாகாண சபைக்கு வழங்­கப்­பட்­டது.

5) வீட­மைப்பும் கட்­டி­டமும் மாகாண சபைக்கு வழங்­கப்­பட்­டது.

6) சமூக சேவை­களும் புனர்­வாழ்வும் மாகாண சபைக்கு வழங்­கப்­பட்­டது.

7) பெரும் தெருக்கள், பெரும்­பா­லங்கள் தவிர்ந்த ஏனைய தெருக்கள். பெரும் பாலங்கள் தவிர்ந்த ஏனைய பாலங்கள் மாகாண சபைக்கு வழங்­கப்­பட்­டது.

8) கிரு­ஷிகம், விவ­சாயம் மாகாண சபைக்கு வழங்­கப்­பட்­டது.

9) சுகா­தாரம், சௌக்­கியம் என்­பன மாகாண சபைக்கு வழங்­கப்­பட்­டது.

10) சுதேச வைத்­திய சேவை மாகாண சபைக்கு வழங்­கப்­பட்­டது.

11) உள்ளூர் சந்­தைகள், விற்­பனை நிலை­யங்­க­ளுக்­கான அனு­மதி மாகாண சபைக்கு வழங்­கப்­பட்­டது

12) நீர்ப்­பா­சனம், பாரிய நீர்ப்­பா­சனத் திட்­டங்கள் தவிர்ந்­தவை மாகாண சபைக்கு வழங்­கப்­பட்­டது.

இதேபோல் இன்னும் 25 விட­யங்கள் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன. சுருக்­க­மாகக் கூறு­வ­தானால் உள்ளூர் மட்ட உயர்­வுக்குத் தேவை­யான விட­யங்கள் அனைத்தும் மாகாண சபைக்கு வழங்­கப்­பட்­டது.

இவ்­வாறு மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அரச காணி இன்னும் பிரச்­சி­னை­யாக உள்­ளது

அரச காணி மத்­திய அர­சி­டமும் உள்­ளது

இதற்குள் குடி­யேற்­றமும் காணி வழங்கல் உட்­பட மற்றும் தேவை­க­ளுக்­கான அனு­ம­தியை வழங்கும் அதி­காரம் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது. சில நிபந்­த­னை­யு­ட­னேயே அரச காணி மாகாண சபைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது எனலாம்.

“அரச காணி அர­சுக்­கு­ரி­யது என்­பது தொடர்ந்தும் ஏற்­கப்­பட வேண்டும் என்றும் அக்­கா­ணிகள் எவ்­வாறு காணி அற்­ற­வர்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் என்றும் முன்னர் கூறப்­பட்ட சட்ட திட்­டங்­க­ளுக்­க­மை­யவே இவ்­ அ­ரச காணி­களை மாகாண சபை கையாள வேண்­டு­மென்றும் கூறப்­பட்­டுள்­ளது. இதன் பொருளை விளங்கிக் கொள்ள சிறு உதா­ர­ணத்தை மட்டும் சுட்­டிக்­காட்­டு­கிறேன். உதா­ர­ண­மாக உயர்­கல்வி அமைச்சு வட­மா­கா­ணத்தில் ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்­தையோ அல்­லது வேறு உயர் தொழில்­நுட்பக் கல்­லூ­ரி­யையோ நிர்­மா­ணிக்க விரும்­பு­கி­றது என்றால், மேற்­படி கல்வி அமைச்சு மாகாண சபை­யிடம் அதனைச் சுட்­டிக்­காட்டி அக்­கா­ணியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை சிலர் ஏற்­றுக்­கொள்ள மறுக்­கின்­றனர். அதற்குக் காரணம் அரச காணி மாகாண சபையின் விட­யத்­திற்குள் வர­வில்லை என்றும் மத்­திய அரசு அதற்­கு­ரிய அனு­ம­தியை மாகாண சபை­யிடம் பெற்­றுக்­கொள்­ளாமல் கட்­ட­டத்தை கட்டத் தொடங்க முடி­யாது என வாதி­டு­வது தவறு என்றும் கூறு­கின்­றனர். இந்த வினாவை பல அர­சி­யல்­வா­திகள் சுட்­டிக்­காட்டி மத்­திய அரசு தனது தேவைக்­கென காணி ஒன்றை பெறு­வ­தற்கு மாகாண சபை­யிடம் அனு­ம­தியைப் பெறு­வது அரசின் இறை­மைக்கு சவால் என்றும் கூறு­வதை நாம் காணலாம். பாரா­ளு­மன்­றத்­திலும் இத் தர்க்கம் நடை­பெ­று­வ­துண்டு. பாரா­ளு­மன்றம் தனக்குத் தேவை­யான காணியை குறிப்­பிட்டு அக்­கா­ணியில் அபி­வி­ருத்­தியை தொடங்க மாகாண சபையின் அனு­மதி தேவை­யில்லை என்றும் நடை­பெறப் போகும் விட­யத்தை மாகாண சபைக்கு கூறினால் மட்டும் போதும் என்றும் சட்டப் பேரா­சி­ரி­யர்கள் கருத்து தெரி­வித்­துள்­ளனர். உயர் நீதி­மன்­றமும் 2013.09.26 ஆம் திகதி வழங்­கிய சோலை­முத்து ராசு வழங்­கிய தீர்ப்பு இதற்கு சார்­பாக இருப்­ப­தையும் காணலாம்.

சோலை­முத்து ராசு வழக்கு

மேலே கூறிய மாகாண சபையின் அதி­கா­ரத்­தினுள் அரச காணி­களின் அதி­காரம் வரு­கி­றது என்­ப­தற்கு உயர்­நீ­தி­மன்றம் வழங்­கிய தீர்ப்பில் இட­மில்­லாமல் போய்­விட்­டது.

1979 ஆம் ஆண்டு அரச காணியை மீளப்­பெ­றுதல் சட்டத்தின் கீழ் ஒரு­வரை அரச காணி­யி­லி­ருந்து வெளி­யேற்றும் கட்­ட­ளையை கண்டி மேல் நீதி­மன்றம் வழங்­கி­யி­ருந்­தது. அதன் பின்னர் இவ்­வ­ழக்கு உயர்­ நீ­தி­மன்­றத்­திற்கு இறுதித் தீர்ப்­புக்கு வந்­தது. உயர் நீதி­மன்றம் பின்­வ­ரு­மாறு தீர்த்­தது. அரச காணி ஒன்றில் குடி­யேற்றம் நடத்­தப்­ப­ட­வேண்­டு­மெனில் அதற்­கு­ரிய காணியை தெரிவு செய்து மத்­திய அர­சிடம் (மத்­திய காணி ஆணை­யா­ள­ரிடம்) அனு­ம­தியை மாகாண சபை  அரசு பெற வேண்டும். இதன் மூலம் மாகாண சபை காணி­யாளர் தனது செய­லுக்­கான அனு­ம­தியை மத்­திய அரசின் காணி­யா­ள­ரிடம் இருந்தே பெற­வேண்­டி­யுள்­ளது. ஆகவே மத்­திய அர­சுக்கே காணி சம்­பந்­த­மான அதி­காரம் உண்டு என்­பது ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் மத்­திய அரசு தனது அதி­கா­ரத்தைப் பிர­யோ­கிக்க மாகாண சபை­யிடம் அனு­ம­தியைப் பெற­வேண்டும் என்­பது வினோ­த­மா­னது. ஆகவே மாகாண சபை­க­ளுக்கு அரச காணி சம்­பந்­த­மாக அனு­ம­தியைப் பெறுதல் அவ­சியம் என கூற­மு­டி­யாது” என உயர் நீதி­மன்றம் கூறி­யது.

ஆகவே 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பில் மாகாண சபை நிர­லுக்குள் வரும் அரச காணி பற்­றிய விடயம் தெளி­வில்லை என கூறக்­கூ­டி­ய­தா­யி­ருக்­கி­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று வரும் எச்­சந்­தர்ப்­பத்­தி­லா­வது சட்ட அறி­ஞர்கள் இவ்­வி­ட­யத்தைக்  கவ­னிக்கத் தவ­றக்­கூ­டாது.

மாகாண சபை நிரலில் உள்ள அரச காணி பற்­றிய முடிவு பரி­பூ­ர­ண­மா­ன­தாக இருக்­க­வேண்டும்

மாகாண சபை பற்­றிய பிரச்­சி­னைகள் ஒரு­புறம் இருக்க மறு­புறம் அச்­ச­பைக்­கு­ரிய அதி­கா­ரங்­களும் சட்­டச்­சிக்கல் நிறைந்து காணப்­ப­டு­கின்­றது. அதற்கு நல்­ல­தொரு உதா­ரணம் அரச காணி என்ற விட­ய­மாகும்.

சனாதிபதி தேர்தலின் பின்னர் இப்பிரச்சினை எழுவது தடுக்க முடியாது இருக்கும். ஆகவே 13 ஆவது அரசியலமைப்புக்கு திருத்தம் தேவையாயின் அதனைத் திருத்தி காணி சம்பந்தமான விடயம் அவ் அவ் மாகாணங்களில் உள்ளவர்களிடையே விட வேண்டும். இதற்குரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

தொகுப்புரை

நிலமானது ஒரு குறித்த அளவிலேயே ஒரு நாட்டுக்குச் சொந்தமாகவிருக்கிறது. சில நாடுகளில் சண்டை நடைபெறுவது நிலப் பரப்பை கூட்டிக்கொள்ளவேயாகும் என்பதை மறுக்கமுடியாது. ஆகவே ஒவ்வொரு நாட்டிலும் நிலம் நிச்சயமானது. இலங்கையிலும் இந்நிலையேயுண்டு.

இலங்கையில் காணிக்குடியேற்றங்கள் மத்திய அரசினாலேயே ஏற்படுத்தப்பட்டன. 13 ஆவது அரசியலமைப்பில் நிலம் என்பது மாகாண சபை நிரலுக்குள் வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனை இலங்கை உயர் நீதிமன்றம் சோலை முத்துராசு வழக்கில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே காணிக்குடியேற்றம் மாகாண சபைகளால் நடத்தப்பட்டபோதும் மத்திய அரசின் அனுமதி அரச காணியைப் பெற தேவையாயுள்ளது. ஆகவே அரச காணியின் நிலை என்ன என்பதை தெளிவாக அறிவுறுத்த மாகாண  அரசுகளும் மத்திய அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி அரச காணியின் நிலையை ஒரு முடிவுக்குள் கொண்டுவரவேண்டும்.

மேலும் இலங்கையில் உள்ள இனப் பிரச்சினையை மேலும் தாமதிக்காமல் ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இல்லையேல் இலங்கை சுபிட்சம் நிறைந்த நாடாக மாறமாட்டாது.

வரப்போகும் அரசுகள் இதனை மனதில் எடுக்கவேண்டும். தற்போதைய காலம் தேர்தல் காலமாதலால் இப்பிரச்சினையை மனதில் பதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22