தெற்காசியாவில் கரியமில சான்றளிக்கப்பட்ட முதலாவது நிதி நிறுவனமாக CDB அங்கீகாரம்

Published By: Priyatharshan

26 May, 2016 | 11:10 AM
image

முன்னரே தீர்மானிக்கப்பட்ட காரணிகளின் அடிப்படையில் அதன் கரியமில தடத்தை குறைப்பதற்கான நிறுவனத்தின் பண்பாட்டாக சீரமைத்துள்ள சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனம், இலங்கையில் பேண்தகைமை தரங்கள் மற்றும் சாதனைகளை கொண்ட முழுமையான நடுநிலைமிக்க கரியமில நிறுவனமான இலங்கை கரியமில நிதியம் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தினால் தெற்காசியாவில் ISO 14064-1 கரியமில சான்றளிக்கப்பட்ட முதலாவது நிதி நிறுவனமாக தரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை கரியமில நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி புத்திக ஹேமஷாந்த CDB தலைமை காரியாலயத்தில் வைத்து கரியமில சான்றிதழை CDB இன் பிரதம நிதி அதிகாரியான தமித் தென்னகோன் அவர்களிடம் அண்மையில் கையளித்திருந்தார்.

CDB இன் தலைமை அலுவலகத்தில் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து வாகனங்கள், ஊழியர் போக்குவரத்து, உத்தியோகபூர்வ வான் போக்குவரத்து, கரியமில வெளியேற்றத்தை கண்காணித்தல் மற்றும் சக்தி பயன்பாடு போன்ற காரணிகள் சான்றளிப்பு செயல்முறையின் போது கவனம் செலுத்தப்பட்டிருந்தன. 

2015இல் கரியமில தடம் 677 டன் CO2 மதிப்பீடுகளை பதிவு செய்துள்ளது. நடுநிலையான கரியமில சான்றளிப்பு செயல்முறையானது இலங்கை கரியமில நிதியம் ஊடாக தணிக்கை மற்றும் சரிபார்க்கப்படுகிறது.

பொகவந்தலாவ பிரதேசத்திலுள்ள Kirkoswald குழுமத்தில் புனல் மின் ஆலையை கொண்டுள்ள போகோ பவர் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து கரியமில தரமதிப்புகளை கொள்வனவு செய்த CDB ஆனது இலங்கை பேண்தகு சக்தி அதிகாரசபை மற்றும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றின் அனுமதியை பெற்று அதன் கரியமில வெளியேற்றத்தை ஈடுசெய்து வருகிறது. 

இலங்கை கரியமில வெளியேற்ற திட்டத்தின் (SLCCS) கீழ் இலங்கை கார்பன் நிதியத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்ட முதலீட்டு சபை திட்டமாக Bogo Power காணப்படுகிறது.

CDB இன் திட்டங்கள் குறித்து ஹேமஷாந்த குறிப்பிடுகையில்,

‘இன்றைய கட்டாய பசுமை தேவைகளுள் ஒன்றான பூமியை பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு மற்றும் தனியார் துறையின் உந்துசக்தி ஆகியன வரவேற்கத்தக்கதாக உள்ளது’ என்றார். 

“அனைத்து நிறுவனங்களினதும் கரியமில தடத்தை குறைக்க உதவுவதும், குறைந்த கரியமில ப்ளு-கிரீன் பொருளாதாரத்தை நோக்கி தேசத்தை முன்னோக்கி நகர்த்துவதுமே எமது குறிக்கோளாகும். 

எமது புதிய தலைமுறைக்கு மட்டுமன்றி, எமக்கும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கிலேயே இம்முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சக்தி பாவனையை குறைத்தல் மற்றும் கரியமில வெளியேற்ற குறிக்கோள்களை அடைய தனியார் துறையின் ஆதரவு நாட்டின் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. 

கரியமில சான்றளிப்பு திட்டமானது வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொருட்கள் மற்றும் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு வகையான பொருட்களினதும் கார்பன் வெளியீட்டை நாம் குறைக்க திட்டமிட்டுள்ளதுடன் சுற்றுச்சசூழல் மீதான அதன் தாக்கம் குறித்து மக்கள் உணர்ந்து கொள்ளக்கூடியதாக அமையும். எதிர்கால சந்ததியினருக்கு சூழலை பாதுகாக்க விரும்புவோர் நிச்சயமாக குறைந்த கார்பன் வெளியீட்டையுடைய பொருட்களையே கொள்வனவு செய்வர்” என மேலும் அவர் தெரிவித்தார்.

தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையின் முதலாவது கரியமில சான்றளிக்கப்பட்ட நிதி நிறுவனமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள CDB இன் பிரதம நிதி அதிகாரியான தமித் தென்னகோன் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கான அர்ப்பணிப்பை விஸ்தரிக்கவுள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், சூழல் மாசடைதலை குறைத்து சூழலை பாதுகாப்பதற்கான திட்டங்களையும் CDB முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார். 

“2016 இன் முடிவில் கார்பன் வெளியேற்றத்தை 10%ஆல் குறைப்பதே எமது திட்டமாகும். எமது குழுவினர் மற்றும் வர்த்தக பங்காளர்கள் மத்தியில் ஏற்கனவே நாம் சக்தி சேமிப்பு தொடர்பில் விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து கட்டங்களிலுமான அடிமட்டத்திலிருந்து சிறந்த நடைமுறைகளை கொண்ட விழிப்புணர்வுகளை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை நாம் செயற்படுத்தி வருகிறோம்” என்றார்.

CDB இன் பசுமை முயற்சிகள் அனைத்தும் கரியமில தடத்தை குறைக்கும் கண்ணோட்டத்திலேயே முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கையில் ஒரு பில்லியன் பெறுமதி கொண்ட முதலாவது பசுமை சொத்து அடிப்படை கடனீட்டுமயமாக்கலாக CDB காணப்படுகிறது. கடந்த 2015/16 இல் CDB ஆனது ஒட்டுமொத்த ஹைபிரிட் மற்றும் இலத்திரனியல் வாகனப் பிரிவுகளில் 22% வீதத்தில் சூழல் நட்புறவான வாகன வசதிகளை ஊக்குவித்திருந்தது. 

இந்த நிறுவனம் அதன் கூட்டாண்மை அலுவலகத்தில் மழைநீர் அறுவடை தொழில்நுட்பத்தையும், ஒலி முதலீடுகளில் சூரியசக்தியே நிலையான தெரிவு என்பதை நம்புகிறது. CDB இன் மிஹிலக ஆதரென் எனும் சூழல் திட்டத்தின் ஊடாக மரம் வளர்த்தல் மற்றும் வன பாதுகாப்பு திட்டங்கள் உள்ளிட்ட பசுமை நடைமுறைகள் குறித்து சமூகத்திலும் விசேடமாக இளம் பிள்ளைகள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 

இதனூடாக சூழல் மாசடைதல் மற்றும் சுகாதாரம் மீதான தாக்கத்தை சுட்டிக்காட்டி சக்தி சேமிப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் கடதாசி மற்றும் இணைய கழிவுகள் மீள்சுழற்சியாக்கப்படும் 3R concept களை ஊக்குவிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58