போயிங் - 777 என்ற விமானம் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் உள்ள ஷெரெமெட்டியோ சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஷெரெமெட்டியோ விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விமானத்தில் 488 பேர் இருந்துள்ளதாகவும் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளது.