புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர்  சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிப்­ப­தற்கு  இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி  எடுத்­துள்ள முடி­வினை வழ­மை­போன்றே இன­வாத கண்­ணோட்­டத்­துடன்  பிர­சா­ரப்­ப­டுத்­து­வ­தற்கு  எதி­ர­ணி­யினர் முனைந்து வரு­கின்­றமை கண்­கூ­டாக  தெரி­கின்­றது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை வவு­னி­யாவில்  கூடிய இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின்  மத்­திய செயற்­கு­ழுக்­கூட்­டத்தில்  ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில்  கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­துடன்  புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு  ஆத­ரவு வழங்­கு­வது என்ற  தீர்­மா­னமும் எடுக்­கப்­பட்­டது.  இந்த  தீர்­மானம் தொடர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளான  புௌாட்,  ரெலோ ஆகி­ய­வற்­றுடன்  பேச்­சு­வார்த்தை நடத்தி  கூட்­ட­மைப்பில் இறுதி முடி­வினை அறி­விப்­ப­தற்­கான பொறுப்பு  அதன் தலைவர் இரா. சம்­பந்­த­னிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த பின்­ன­ணி­யில்தான் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தீர்­மா­னத்தை இன­வாத சாயம் பூசி விமர்­சிக்கும் செயற்­பாடு ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.  பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் பேரா­சி­ரியர் ஜி.எல். பீரிஸ்,  அந்த முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்த யாப்பா  அபே­வர்த்­தன, சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்த சம­ர­சிங்க  உட்­பட பலரும் இந்த தீர்­மானம் தொடர்பில் இன­வாத பிர­சா­ரங்­களை  மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

13 அம்ச  கோரிக்­கை­களை முன்­வைத்து அதனை ஏற்­றுக்­கொள்ளும் வேட்­பா­ள­ருக்கே ஆத­ரவு என்று மிகத் தெளி­வாக கூறிய தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு திடீ­ரென சஜித்தை ஆத­ரிக்க ஏக­ம­ன­தாக  தீர்­மா­னித்­துள்­ளமை சந்­தே­கத்தை  தோற்­று­வித்­துள்­ளது என்று  பேரா­சி­ரியர் ஜி.எல். பீரிஸ் தெரி­வித்­துள்ளார். கூட்­ட­மைப்பின் நிபந்­த­னை­க­ளுக்கு சஜித் பிரே­ம­தாஸ அடி­ப­ணிந்­து­விட்­ட­தாக மஹிந்த யாப்பா அபே­வர்­தன அறி­வித்­தி­ருக்­கின்றார்.

தமி­ழ­ர­சுக்­கட்­சி­யினர்  அவர்­க­ளுக்கு சாத­க­மான விட­யங்கள்  ஏதா­வது இல்­லா­விட்டால் சஜித்தை  ஆத­ரித்­தி­ருக்­க­மாட்­டார்கள் என்று மஹிந்த சம­ர­சிங்­கவும் கூறி­யி­ருக்­கின்றார்.

தேர்தல் நெருங்­கி­வரும் நிலையில் தென்­ப­குதி சிங்­கள மக்­கள் மத்­தியில் இன­வாத பிர­சா­ரத்தை மேற்­கொண்டு அர­சியல் சுய­லா­பத்தை  அடை­யலாம் என்ற வகை­யி­லேயே  இத்­த­கைய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தா­கவே தெரி­கின்­றது.  எமது நாட்டின் வர­லாற்றை எடுத்­துக்­கொண்டால் கடந்த கால தேர்­தல்­களின் போதும் இத்­த­கைய செயற்­பா­டு­களில்  இன­வாத சக்­திகள் ஈடு­பட்டு வந்­த­மையே வர­லா­றாக உள்­ளது.

ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உட்­பட தமிழ் கட்­சி­களின் ஆத­ரவைப் பெறு­வ­தற்கு பொது­ஜன  பெர­மு­னவின் வேட்­பாளர்  கோத்­த­பாய ராஜ­பக்ஷ, புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர்  சஜித் பிரே­ம­தாஸ ஆகியோர்  முயன்று வந்­தனர்.  பொது­ஜன பெர­மு­னவின் தலை­வரும்  எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான  மஹிந்த ராஜ­பக்ஷ, வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஆகியோர்  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின்  தலை­வர்­க­ளுடன் பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்­தனர்.  கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ. சுமந்­திரன் எம்.பி.யுடன் கோத்­த­பாய ராஜ­பக் ஷ இரு­த­ட­வைகள்  கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.  பழை­ய­ன­வற்றை மறந்து தமக்கு ஆத­ரவு தர­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து இவர்கள்  கூட்­ட­மைப்பின் தலை­வர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர்.

எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­­பக்ஷவும் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர்  எம்.ஏ. சுமந்­தி­ரனை  சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­லையும் மேற்­கொண்­டி­ருந்தார்.  

இதே­போன்றே  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாஸ ஆகி­யோரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் உட்­பட பல­ரையும் சந்­தித்து  பேசி­யி­ருந்­தனர். யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்த வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாஸ அங்கும் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார்.

இவ்­வாறு  இரு தரப்­பி­ன­ருமே தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின்  ஆத­ரவைப் பெறு­வ­தற்கு முயற்சி எடுத்­தி­ருந்­தனர்.  தமிழ்  கட்­சிகள் தமக்கு ஆத­ரவு வழங்­க­வேண்டும் என்­பதில் இரு­த­ரப்­புமே பேரவா கொண்­டி­ருந்­தது. ஆனாலும் தற்­போது தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் பிர­தான கட்­சி­யான இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு ஆத­ரவு அளிப்­ப­தாக  தீர்­மா­னித்­த­வுடன் அந்த  தீர்­மா­னத்தை இன­வாத பிர­சா­ரத்­திற்கு  உட்­ப­டுத்த முயல்­வது அர­சியல் சுய­ந­லத்தின் வெளிப்­பாடே தவிர வேறொன்றும் இல்லை என்றே கூற­வேண்­டி­யுள்­ளது. எட்­டாத பழம் புளிக்கும் என்ற  நிலைப்­பாட்­டி­லேயே எதி­ரணி  உள்­ள­தா­கவே கரு­த­வேண்­டி­யி­ருக்­கின்­றது.

ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் தமிழ் கட்­சிகள் பொது­வான நிலைப்­பா­டொன்­றுக்கு  வர­வேண்டும் என்ற வலி­யு­றுத்தல்  தமிழ் மக்கள் மத்­தியில்  எழுந்­தி­ருந்­தது.  தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பொது­வான நிலைப்­பா­டொன்­றுக்கு  தமிழ் கட்­சிகள் வந்து அத­ன­டிப்­ப­டையில் பிர­தான ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளுடன் பேச்­சுக்­களை நடத்தி தீர்­மானம்  எடுக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இத­ன­டிப்­­ப­டையில்  யாழ்ப்­பாணம் கிழக்கு பல்­க­லைக்­க­ழக  மாணவர் ஒன்­றி­யத்தின் ஏற்­பாட்டில் ஆறு தமிழ் தேசி­யக்­கட்­சி­களின் தலை­வர்கள் ஒன்­றி­ணைந்து  கலந்­து­ரை­யா­டி­ய­துடன் ஐந்து தமிழ் கட்­சி­களின் தலை­வர்கள்  ஒன்­றி­ணைந்து தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வுகள் தொடர்பில் 13 அம்ச திட்­ட­வ­ரை­பொன்­றையும் தயா­ரித்­தி­ருந்­தனர்.  அந்த  வரைபு தொடர்பில் பிர­தான  ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி இறுதி தீர்­மா­னத்­திற்கு வரு­வது என்றும் முடிவு எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.  ஆனால் இந்த திட்­ட­வ­ரைபு தொடர்­பான செய்­திகள் வெளி­யா­ன­வுடன்  அதனை இன­வாத கண்­ணோட்­டத்­துடன்  பிர­சா­ரப்­ப­டுத்த தென்­ப­கு­தியில்  நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. எதி­ர­ணியின்  முக்­கி­யஸ்­தர்கள் இந்த  செயற்­பாட்டில் தீவி­ர­மாக  ஈடு­பட்­டி­ருந்­தனர்.  

அத்­துடன் 13 அம்ச திட்­டங்கள் தொடர்பில் ஐந்து தமிழ் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை  நடத்­து­வ­தற்கு தயா­ரில்லை என்றும் அந்த திட்­டங்கள்  நாட்டை பிள­வு­ப­டுத்தும் என்றும் பொது­ஜன பெர­மு­னவின்  வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­­பக் ஷவும் எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­­பக் ஷவும் அறி­வித்­தி­ருந்­தனர்.

இந்த விடயம் தொடர்பில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர்  சஜித் பிரே­ம­தா­ஸவும் மௌனம் காத்­து­வந்தார்.  எவ­ரது நிபந்­த­னை­க­ளுக்கும் தான் அடி­ப­ணி­யப்­போ­வ­தில்லை என்று அவர் பொது­ப்பட கூட்­டங்­களில்   உரை­யாற்­றி ­வந்தார்.  ஐந்து  தமிழ் தேசி­யக் ­கட்­சி­களும் எதிர்­பார்த்­ததைப் போன்று  இரு பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்­களும் 13 அம்ச கோரிக்­கைகள் தொடர்பில்  கலந்­து­ரை­யாட முன்­வ­ரா­த­தை­ய­டுத்து  அடுத்த கட்­ட­மாக என்ன நட­வ­டிக்­கை­யினை எடுப்­பது என்­பது குறித்து ஐந்து தமிழ்  தேசி­யக்­கட்­சி­களின் தலை­வர்கள் ஆராய்ந்­தி­ருந்­தனர். ஆனால்  அந்த விட­யத்தில் இவர்­க­ளுக்குள் இணக்­கப்­பாடு ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை.

 இத­னை­ய­டுத்து தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தமது கட்­சியின் நிலைப்­பாட்டை அறி­வித்­தி­ருந்தார்.  அதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை  கூட்­ட­மைப்பின் பிர­தான கட்­சி­யான  தமி­ழ­ர­சுக்­கட்­சியும் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு ஆத­ர­வான தமது நிலைப்­பாட்டை அறி­வித்­தி­ருக்­கி­றது.  சஜித் பிரே­ம­தா­ஸவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை கருத்தில் கொண்டும் வேட்­பா­ளர்­களின்  செயற்­பா­டு­களை கருத்தில் எடுத்தும் இந்த முடி­வுக்கு தாம் வந்­துள்­ள­தாக தமி­ழ­ர­சுக்­கட்சி  அறி­வித்­தி­ருக்­கின்­றது.

உண்­மை­யி­லேயே தமிழ் தேசி­யக்­கட்­சிகள்  ஒன்­றி­ணைந்து தமிழ் மக்­களின்  பிரச்­சி­னைகள் தொடர்பில் பொது­வான நிலைப்­பா­டொன்­றுக்கு வந்து பேச்சுக்களை நடத்த முயன்றபோது அதனை இனவாத கண்ணோட்டத்துடன் அணுகியவர்கள்  இன்று தமிழரசுக்கட்சி  தீர்மானத்தை எடுத்தவுடன் அதனையும் இனவாத பிரசாரமாக  மேற்கொண்டு வருகின்றனர்.  இதிலிருந்து  தமிழ் மக்களின் பிரச்சினைகளை  இத்தகையவர்கள் எதிர்காலத்திலாவது தீர்த்து வைப்பார்களா என்ற சந்தேகம் மேலெழுகின்றது.

இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி  தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற கோதாவில் தற்போதைய  செயற்பாடுகள் அமைந்துள்ளமை  கவலைக்குரிய விடயமாக உள்ளது.  கடந்த பல தேர்தல்களிலும் இத்தகைய இனவாதமும் மதவாதமும்  தலைவிரித் தாடியிருந்தது. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து வருவது நாட்டில் நல்லிணக்கத்திற்கு எந்தவகையிலும் உதவப்போவதில்லை. தேர்தல்களில் வேண்டுமானால் இனவாதத்தை கிளப்பி குறுகிய கால நன்மைகளை அடைய முடியுமே தவிர அது எந்தவகையிலும் நாட்டுக்கு நன்மை அளிக்கப்போவதில்லை.

எனவே இதனை உணர்ந்து தென்பகுதி அரசியல் கட்சிகள் இனியாவது செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்பு கின்றோம்.

(06.11.2019 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )