(நா.தனுஜா)

அமெ­ரிக்­கா­வுடன் கைச்­சாத்­தி­டு­வ­தற்குத் திட்­ட­மிட்­டி­ருக்­கின்ற மிலே­னியம் சலென்ஞ் கோப்­ப­ரேஷன் உடன்­ப­டிக்­கை­யினால் நாட்­ டுக்குப் பாதிப்பு ஏற்­படும் என்று கூறு­கின்ற எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ, எத்­த­கைய பாதிப்பு ஏற்­படும் என்று தெளி­வு­ப­டுத்­த­வில்லை.எனவே ஜனா­தி­பதித் தேர்தல் திகதி நெருங்கும் நிலையில் மக்­களை தவ­றாக வழி­ந­டத்­தாமல், மிலே­னியம் சலென்ஞ் கோப்­ப­ரேஷன் உடன்­ப­டிக்­கை­யினால் நாட்­டுக்கு அல்­லது மக்­க­ளுக்கு எத்­த­கைய தீங்கு ஏற்­படும் என்­பதை வெளிப்­ப­டுத்­து­மாறு எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட பொது­ஜன பெர­மு­னவின் தலை­வர்­க­ளுக்கு சவால் விடுப்­ப­தாக நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர  தெரி­வித்­துள்ளார். மில்­லே­னியம் சவால் ஒப்­பந்தம் குறித்து நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேற்று செவ்­வாய்க்­கி­ழமை வெளி­யிட்­டுள்ள விசேட அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாவது,

அமெ­ரிக்­கா­வுடன் கைச்­சாத்­தி­டு­வ­தற் குத் திட்­ட­மிட்­டி­ருக்­கின்ற மிலே­னியம் சலென்ஞ் கோப்­ப­ரேஷன் உடன்­ப­டிக்­கை­யினால் நாட்­டுக்குப் பாதிப்பு ஏற்­படும் என்று கூறு­கின்ற எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ, எத்­த­கைய பாதிப்பு ஏற்­படும் என்று தெளி­வு­ப­டுத்­த­வில்லை. மாறாக அமெ­ரிக்­கா­வினால் அழிவு ஏற்­படும் என்­பது போன்ற மாயையை உரு­வாக்க முயற்­சிக்­கின்றார். ஜனா­தி­பதித் தேர்தல் திகதி நெருங்கும் நிலையில் மக்­களை தவ­றாக வழி­ந­டத்­தாமல், மிலே­னியம் சலென்ஞ் கோப்­ப­ரேஷன் உடன்­ப­டிக்­கை­யினால் நாட்­டுக்கு அல்­லது மக்­க­ளுக்கு ஏற்­படும் தீங்கு என்ன என்­பதை வெளிப்­ப­டுத்­து­மாறு எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ உள்­ளிட்ட பொது­ஜன பெர­மு­னவின் தலை ­வர்கள் அனை­வ­ருக் கும் சவால் விடுக்­கின்றேன். தேர்தல் சம­யத்தில் அமெ­ரிக்கா குறித்த பாரிய அச்­ச­ மொன்றைக் கட்­டமைத்து சிகி­ரியா, சிங்­க­ரா­ஜ­வனம் மற்றும் காலி கோட்டை ஆகி­ய­வற்றை அமெ­ரிக்­காவுக்கு விற்­ப­தற்­கான ஆயத்­தங்கள் இடம்­பெ­று­வ­தாக எதி­ர­ணி­யினர் பொய்­யான பிர­சா­ர­மொன்றை முன்­னெ­டுத்துச் செல்­கின்­றனர். எனினும் அதில் எவ்­வித உண்­மையும் இல்லை என்­பதை மக்கள் புரிந்­து­கொண்­டி­ருப்­பார்கள் என்று நம்­பு­கின்றேன். இந்த உடன்­ப­டிக்­கையை கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையும் எதிர்ப்­ப­தாக அண்­மையில் சமூக வலைத்­த­ளங்­களில் செய்­திகள் பர­வி­யுள்­ளன. அதுவும் பொய்­யான முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தொரு பிர­சா­ர­மே­யாகும். இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்­வி­ய­டைவோம் என்­பதைப் புரிந்­து­கொண்டு, மதத்தைப் பயன்­ப­டுத்தி தனிப்­பட்ட அர­சியல் இலா­பத்தை பெறு­வ­தற்­காக மஹிந்த ராஜ­ப­க் ஷவும், கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவும் மிகவும் கீழ் நிலைக்கு இறங்­கி­யி­ருக்­கி­றார்கள் என்­பது தெளி­வா­கின்­றது. இத­னூ­டாக மக்­களை ஏமாற்றி எவ்­வா­றேனும் அவர்­க­ளு­டைய வேட்­பா­ளரை தேர்­தலில் வெற்றி பெறச்­செய்ய வேண்டும் என்­பதே அவர்­க­ளது நோக்­க­மாக இருக்­கின்­றது.

எமது நாட்டின் வர­லாற்றில் முதற்­த­ட­வை­யாக அமெ­ரிக்கப் பிர­ஜை­யொ­ரு­வரை ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்கும், அமெ­ரிக்கப் பிர­ஜை­யொ­ரு­வரை நாட்டின்  முதற்­பெண்­மணி ஆக்­கு­வ­தற்கும் முயற்­சிக்­கின்ற தரப்­பினர் அமெ­ரிக்­கா­வினால் ஆபத்து என்­பது போன்ற மாயை ஏற்­ப­டுத்­து­வது நகைப்புக் கு­ரி­ய­தாக இருக்­கின்­றது.

மிலே­னியம் சலென்ஞ் கோப்­ப­ரேஷன் உடன்­ப­டிக்­கையைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு 2005 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்­தினால் பெரும் முயற்சி எடுக்­கப்­பட்­டது. எனினும் அந்த அர­சாங்­கத்­துக்கு எதி­ராக தேசிய மற்றும் சர்­வ­தேச மட்­டத்தில் சுமத்­தப்­பட்­டி­ருந்த ஊழல் மற்றும் மனித உரி­மைகள் உள்­ளிட்ட பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களின் கார­ண­மாக அந்த உடன்­ப­டிக்­கையை அவர்­களால் கைச்­சாத்­திட முடி­யா­மற்­போ­னது.

மஹிந்த ராஜ­பக் ஷ மிலே­னியம் சலென்ஞ் கோப்­ப­ரேஷன் உடன்­ப­டிக்கை தொடர்பில் மக்கள் மத்­தியில் தேவை­யற்ற அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். ஆகை­யி­னாலேயே நாட்­டுக்கு எத்­த­கைய தீங்கு ஏற்­படும் என்­பதை இது­வ­ரையில் அவர் வெளிப்­ப­டுத்­த­வில்லை. இவ் ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­தி­டு­வதால் நாட்டின் இறைமைக்குத் தீங்கேற்படும் என்று விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர் கூறிவருகின்றனர். எனினும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ, இந்த ஒப்பந்தத்தை நடை முறைப்படுத்துவதற்கு முன்னர் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாத்திரம் அவரது குற்றச் சாட்டை மட்டுப்படுத்தியதன் மூலம், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் பொறுப்பை மேற்படி இரு பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஒப்படைத்திருக்கிறார் என்பது தெளிவாகின்றது.