கொழும்பு 02, தர்மபால வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து கொலைசெய்யப்பட்ட நிலையில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச் சம்பவத்தில் 49 வயதான ஆண் ஒருவரே ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். 

கொலைச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு  9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.