முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோரை  நவம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று புதன்கிழமை கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் எடுக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும்  பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் மேல் நீதிமன்ற உத்தரவை அடுத்து, கொழும்பு பிரதான நீதிவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே அவர்கள் இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.