பொலிஸாரால் “ஆவா” என தேடப்பட்டுவந்த நபர் நீதிமன்றில் சரண்

Published By: Daya

06 Nov, 2019 | 10:22 AM
image

யாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டுச் சம்பவங்கள், வன்முறைகள், கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கடந்த 2 வருடங்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த “ஆவா” என பொலிஸாரால் தெரிவிக்கப்படும் இளைஞர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று சரணடைந்தார்.

சந்தேகநபரை இம்மாதம் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆவா குழுவின் முக்கியஸ்தர் எனவும் “ஆவா” எனவும் பொலிஸாரால் குறிப்பிடப்படும் இணுவிலைச் சேர்ந்த குமரேசரத்தினம் வினோதன் என்ற இளைஞனே இவ்வாறு  மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணி ஊடாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார்.

அச்சுவேலி பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட வன்முறைச் சம்பவம் ஒன்றின் வழக்கில் சந்தேக நபராகக்  குறித்த நபர் நேற்று  சரணடைந்தார். 

இந்நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம், பனிப்பாய், சுன்னாகம் உட்பட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பல பொலிஸ் நிலையங்களால் வினோதன் கடந்த 2 வருடங்களாகத் தேடப்பட்டு வந்துள்ளார்.

வாள்வெட்டு வன்முறை, பொதுமக்களுக்குக் காயம் விளைவித்தமை, கொள்ளை, கூரிய ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தமை, வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களுக்குச் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01