எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க வருகை தரும்போது புர்கா அல்லது நிகாப் அணியலாம் என தெரிவித்த தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க, வாக்களிப்பு நிலையத்துக்குள் நுழையும்போது அவற்றை அகற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
புர்கா மற்றும் நிகாப் அணிவதை எங்களால் தடை செய்ய முடியாது, ஏனெனில் அது அவர்களின் கலாசாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது அவர்களுக்கு ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படுவதற்கு முன்பு அவர்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும்.
வாக்களிக்கும்போது வாக்களார் ஒருவர் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டியது அவசியம். அவரது அடையாளம் அடையாள அட்டையில் முகத்துடன் இணையாக இருக்க வேண்டும். அதற்காக, அவர் முகத்தை மறைத்திருக்கும் நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்ற வேண்டும்.
எனினும் மேற்படி நிபந்தனைகளை கருத்திற்கொள்ளாமல் ஒரு வாக்களார் தனது நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்றாது வாக்களிப்பதற்கு, வாக்களிப்பு நிலைய தலைமை அதிகாரி அனுமதி வழங்கக்கூடாது எனவும் சமன் சமன் ஸ்ரீ ரத்னாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM