கொழும்பில் இருந்து பதுளை வரை நான்கு விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் திட்டம்மிட்டுள்ளது.

இம்மாதம் 8 , 9 மற்றும் 11 ஆம் திகதிகளில் குறித்த நான்கு ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அத்தோடு குறித்த நாட்களில் கொழும்பு ரயில்வே நிலையத்தில் இருந்து காலை 7.35 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து மாலை 4.33 மணிக்கு பதுளையை நோக்கி குறித்த ரயில்கள் சென்றடையும்.

இந்நிலையில் பதுளையில் இருந்து இரவு 8.00 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பிக்கும் ரயில்கள் கொழும்பு ரயில்வே நிலையத்திற்கு காலை 5.26 மணிக்கு வந்தடையும் என ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.