ஆப்­கா­னிஸ்­தா­னிய தலிபான் தீவி­ர­வா­திகள் அமெ­ரிக்க ஆளற்ற விமானத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்த அந்தக் குழுவின் தலைவர் முல்லாஹ் அக்தர் மன்­சூ­ருக்குப் பதி­லாக புதிய தலை­வ­ராக மௌலவி ஹைப­துல்லாஹ் அகன்ட்­ஸ­டாவை புதன்­கி­ழமை பெயர் குறிப்­பிட்­டுள்­ளனர்.

தலிபான் தீவி­ர­வா­திகள் தம்மால் அன்­றைய தினம் வெளியி­டப்­பட்ட அறிக்­கையில் அக்தர் மன்சூர் மர­ண­மா­கி­யுள்­ளதை முதல் தடவையாக ஒப்­புக்­கொண்­டுள்­ளனர்.

மன்சூர் கடந்த சனிக்­கி­ழமை பாகிஸ்­தா­னிய பலோ­சிஸ்தான் மாகா­ணத்தில் அவ­ரது காலை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட ஆளற்ற விமானத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­தி­ருந்தார். 

அவ­ரது வழி­ந­டத்­தலின் கீழ் தலி­பான்கள் சமா­தானப் பேச்­சு­வார்த்­தையில் பங்­கேற்க மறுப்புத் தெரி­வித்­தி­ருந்­தனர்.

மத கல்­வி­மானும் தலிபான் நீதி­மன்ற முன்னாள் தலை­வ­ரு­மான ஹைப­துல்லாஹ் அகன்ட்­ஸடா மன்­சூரின் தலை­மைத்­து­வத்தின் கீழ் தலி­பான்­களின் பிரதித் தலை­வ­ராக பணி­யாற்றி வந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

உச்ச சபையின் ஏக­ம­ன­தான இணக்­கப்­பாட்­டை­ய­டுத்து இஸ்­லா­மிய இராச்­சி­யத்தின் (தலிபான்) தலை­வ­ராக ஹைப­துல்லாஹ் அகன்ட்­ஸடா நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக தலி­பான்­களால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் தலிபான்களின் தற்போதைய பிரதித் தலைவர் சிராஜுதீன் ஹக்கானியுடன் இணைந்து பிறிதொரு பிரதித் தலைவராக முல்லாஹ் மொஹமட் யாகூப் பணியாற்றவுள்ளார்.