தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதிகளுக்குமான விசேட சந்திப்பு இன்று வாழைச்சேனை பாசிக்குடா த ஹாம் நட்சத்திர விடுதியில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ரவி கருணாநாயக்க, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் வடகிழக்குத் தலைவர் கி.சேயோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது தங்களின் ஆதரவு நிலைப்பாட்டுக்கான விடயங்கள் தொடர்பில் பிரதமர் மற்றும் அமைச்சருக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், தேசிய ரீதியாக உள்ள பிரச்சனைகளான இனப்பிரச்சனை தொடர்பில் புதிய அரசியலமைப்பு வரைபு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட ஏனைய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
அதனோடு விசேடமாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டு நடவடிக்கைகள் பலவும் மேற்கொள்ளப்பட்டு முடிவுறாத நிலையில் இருக்கும் கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயம் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM