இலங்கை தமிழரசுக் கட்சியின் முடிவானது மக்களை முன்வைத்துப் பார்க்காது கட்சியை முன்வைத்துப் பார்க்கும் செயலாகவே உள்ளது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைசர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்தமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் இருந்தார்கள் தமிழரசுக் கட்சி புளட் ரெலோ இதில் புளட் அண்மைக்காலங்களில் தமிழரசுக் கட்சி என்ன தீர்மானம் எடுக்கின்றதே அதை நாங்களும் ஏற்கின்றோம் என்ற நிலையில் தான் இருந்து வருகின்றார்கள்.சித்தார்த்தனைப் பெறுத்தவரையில் அவரின் தகப்பனார் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் அவர் புளட் இயக்கத்தின் தலைவராக இருந்தாலும் அவர் தமிழரசுக் கட்சியுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவர் அவர் அந்தக் கட்சியுடன் செல்கின்றார்.

ரெலோவில் தற்போது சில பிரிவுகள் வந்திருப்பதாக அறியமுடிகின்றது எங்களைப் பொறுத்தவரையில் ஈ.பி.ஆர்.எல்.எவ்பும் நாங்களும் கிட்டத்தட்ட ஒரே விதமான கருத்துக்களை கொண்டிருக்கின்றோம் இவற்றில் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதில் நாங்கள் பக்கச்சார்பாக அல்லாது ஒரு ஜதார்த்தமான ஒரு தீர்வை எடுத்திருக்கின்றோம் வெளிப்படையாக என்னென்ன நன்மைகளைத் தரமுடியும் என்று கூறாதிருக்கும் வேட்பாளரிடடையே நாங்கள் தேர்ந்தெடுத்து இவர்கள்தான் தருவார்கள் இவர்களின் மூலம் தான்பெறமுடியும் என்று கூறமுடியாத நிலையில் உள்ள படியால் நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம்.

ஏற்கனவே சில நன்மைகளைப் பெற்ற காரணத்தினால் தமிழரசுக் கட்சி ஒரு தீர்மானத்தை எடுத்திக்கக்கூடும் ஆனால் நான் இதை எவ்வாறு எதிர் பார்ப்பது நாங்கள் முன்னர் சேர்ந்திருந்த கட்சிகள் இப்போது சேர்கின்றார் திரும்பவும் பிரிகின்றார்களே என்று பார்க்கவேண்டும் இதற்குக் காரணம் மக்களை முன்வைத்துப் பார்க்காது கட்சியை முன்வைத்துப் பார்க்கும்போது இந்தப் பிரச்சினைகள் வரத்தான் செய்யும் தமிழ் மக்களின் வருங்காலம் என்பதை மட்டும் முன்வைத்து நாங்கள் நடவடிக்கைகளை எடுத்தோமானால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது நான் தமிழரசுக் கட்சிக்கு அதை இதை செல்லவேண்டிய அவசியம் இல்லை 

நான் வந்ததே தமிழரசுக் கட்சியின் ஊடாக அவர்கள் கருத்துக்களில் மாற்றுக் கருத்துக்கள் இருந்தமையினால் தான் நான் வெ ளியில் வந்து இன்னொரு கட்சியை ஆரம்பிக்கவேண்டும் என்ற நிலைவந்தது பல்கலைக்கழக மாணவர்கள் இது சம்பந்தமாக என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பதை பொறுத்துத்தான் இது சம்பந்தமான கருத்துக்களை வெ ளியிடமுடியும் எந்த ஒரு கருத்தும் எமது ஒற்றுமையை சிதைக்கக்கூடாது என்பது எனது கருத்து

மேலும் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு சில கடப்பாடுகள் இருக்கின்றன கடந்த ஒரு வருடத்தில் பார்த்தீர்களானால் தற்போதைய அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தைக் கொடுத்து மக்களுக்கு அபிவிருத்திப் பணிகளை செய்கின்றார்கள் ஆகவே ஒரு விதத்தில் அவர்கள் பணத்தைக் கொடுத்து தங்கள் பக்கம் இழுத்துவிட்டார்கள் போன்று தெரிகின்றது. எங்களோடு சேர்ந்து ஒருமித்துப் பயணிப்பதாக கூறியிருந்தார்கள் 

ஆனால் அவர்களுக்கு இருக்கும் கடப்பாடை ஒட்டி அவர்களின் தீர்மானத்தில் இருந்து விலகி சில நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள். இது எவ்வளவு காலம் இருக்கும் என்று தெரியாது வருங்காலம் ஒற்றுமையை இழந்துவிடும் என்று நினைக்கின்றேன் ஒரு கட்சி தங்களின் கருத்தை வெளிப்படுத்திய படியால் மற்றக் கட்சிகளும் தங்களின் கருத்தை வெ ளியிடக்கூடும். ஆனால் இதில் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது அவர்கள் எதை எங்களிடம் எதிர்பார்க்கின்றார்கள் என்பதை வைத்து எங்களுடைய நடவடிக்கைள் இருக்கும் என்றார்.