கமல்ஹாசன் திரைத்துறைக்கு சேவையாற்ற தொடங்கி 60 ஆண்டுகள் பூர்த்தியானது முன்னிட்டு சென்னையில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அவருக்கு ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் மிகப்பெரிய அளவிலான பாராட்டுவிழா முன்னெடுக்கப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக இம்மாதம் 17ஆம் திகதியன்று சென்னையில் உள்ள நேரு உள்ளக விளையாட்ரங்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த இசை நிகழ்ச்சியில் சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும், உலகநாயகன் கமல்ஹாசன், அவரது வாரிசுகளான சுருதிஹாசன், அக்ஷரா ஹாசன் மற்றும் ஏராளமான திரை நட்சத்திரங்கள், நடிகர் சங்கத்தினர், தயாரிப்பாளர் சங்கத்தினர், இயக்குனர் சங்கத்தினர் என பலரும் பங்குபற்றவிருக்கிறார்கள்.
பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு ‘உங்கள் நான்’ என பெயரிடப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றுவதற்கு உலகநாயகன் கமல்ஹாசனின் ரசிகர்களும், மக்கள் நீதி மையத்தின் தொண்டர்களும் உற்சாகத்துடன் தற்போதிலிருந்தே காத்திருக்கிறார்கள்.
இதனிடையே கமல்ஹாசனின் பரம ரசிகரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM