(ஆர்.விதுஷா)

புத்தளம்  - உடப்பு கடற்பரப்பை  அண்டிய பகுதியில் 600 கிலோகிராம் நிறையுடைய சட்டவிரோத பீடியிலைகளுடன் இளைஞர்கள் இருவர்  கைது  செய்யப்பட்டுள்ளனர்.

 

கடற்படையினரால் இன்று முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக  கடற்படை தெரிவித்துள்ளது.  

ரோந்து நடவடிக்கையின்  போது சந்தேகத்திற்கு இடமான மீன்பிடிப்படகொன்று அவதானிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அந்த படகை சோதனைக்கு உட்படுத்திய போதே சட்டவிரோத பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அதனையடுத்து குறித்த மீன்டிப்படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவரையும் கடற்படையினர் கைது செய்யதிருந்தனர்.   

சந்தேக நபர்கள் இருவரும் புல்மோட்டை ,கந்தகுளி ஆகிய பகுதிகளை சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடையவர்கள் என விசாரணைகளின்  போது  தெரிய வந்துள்ளது.  

சந்தேக நபர்களையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பீடி  இலை  மற்றும்  மீன்பிடி படகு   ஆகியனவற்றையும் சின்னப்பாடு சுங்க அதிகாரிகளிடத்தில்  ஒப்படைப்பதற்கான  நடவடிக்கைகளை  கடற்படையினர்  மேற்கொண்டுள்ளனர்.  

அத்துடன், சட்டவிரோத  வியாபார நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை தாம்தொடர்ந்தும்  மேற்கொண்டு வருவதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.