(எம்.ஆர்.எம்.வஸீம்)

தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு எடுத்த தீர்மானத்தை விமர்சிப்பவர்கள் ஏன் ஈழம் கொடியை வடக்கில் உயர்த்திய வரதராஜப் பெருமாள் கோத்தாப ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதை விமர்சிப்பதில்லை என  தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி கேள்வி எழுப்பினார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்திருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த தீர்மானத்தின் மூலம் கோத்தாபய ராஜபக்ஷ் தரப்பு அச்சமடைந்துள்ளது. அதனால் சிங்கள மக்களை குழப்பும் நோக்கில் இவர்கள் பொய் பிரசாரங்களை பரப்பிவருகின்றனர்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பார்த்தே கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.