மாலைதீவு பிரஜையொருவரை கைதுசெய்வதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மாவனல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருடன் மேற்படி மாலைதீவு பிரஜைக்கு தொடர்புள்ளதாக குறிப்பிட்டே பொலிஸார் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபரின் படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெற்றால் 011-2326936 என்ற பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரின் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத் தருமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.