இலங்கை அணி இங்­கி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யா­டி­ வ­ரு­கி­றது. இந்­நி­லையில் காயம் கார­ண­மாக இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்­சா­ளர்­க­ளான தம்­மிக்க பிரசாத் மற்றும் துஷ்­மந்த சமீர ஆகியோர் தொட­ரி­லி­ருந்து வில­கி­யுள்­ளனர்.

இவர்கள் இரு­வரும் வில­கி­யது இலங் கை அணிக்கு பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தியுள்­ளது.

இந்நிலையில் வேகப்­பந்து வீச்­சாளர் துஷ்­மந்த சமீ­ரவின் இடத்­திற்கு அறி­முக வீர­ராக சமிந்த பண்­டார அழைக்­கப்­பட்­டுள்ளார்.

29 வய­தான சமிந்த பண்­டார 51 முதற்­தர போட்­டி­ களில் விளை­யாடி 141 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தி­யுள்ளார். இதில் 68 ஓட்­டங்­க­ளுக்கு 9 விக் கெட்டுக்களை வீழ்த்தியதே இவரின் சிறப்பான பந்து வீச்சாகும்.