ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினருடன் சந்திப்பு

Published By: Digital Desk 4

05 Nov, 2019 | 03:41 PM
image

இலங்கையில் நடைபெறும் தேர்தல் முறையை கண்காணிப்பதற்கான குழுவொன்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் வவுனியா கட்சி அலுவலகத்தில் இன்று (05.11) ஒரு மணித்தியாலய சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

உண்மையிலே நாங்கள் இவ்வாறான கலந்துரையாடலை வரவேற்கின்றோம். எங்களுடைய நாட்டில் நடைபெறுகின்ற தேர்தல் வாக்களிப்பு முறையிலே ஒரு நியாயமான மக்கள் சுதந்திரமான வாக்களிப்பதகான சந்தர்ப்பத்தை உருவாக்குவதிலே இவர்களினுடைய கடமை இருக்கின்றது என்பதொரு நல்ல விடயம்.

அவர்களினுடைய கருத்திற்கு அமைவாக தேர்தல் வன்முறைகள் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா? அல்லது மக்கள் எவ்வாறு சென்று வாக்களிக்க வேண்டும் சுதந்திரமாக அவர்கள் சென்றுவாக்களிப்பதற்குரிய நிலை நாடிலே இருக்கின்றதா? இரண்டு வாக்கு போடுவதற்குரிய வாக்குகள் இந்த நாட்டிலே இருக்கின்றதா? அரசியல் கட்சிகள் இந்த தேர்தலில் என்னென்ன முடிவுகளை எடுத்திருகின்றதா ?என்ற கேள்விகளை அவர்கள் கேட்டிருகின்றார்கள்?

குறிப்பாக தவறுதலாக கள்ள வாக்குகளை போடுவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றதா? என்று கேட்ட பொது நாம் கூறியிருகின்றோம். சிங்கள தமிழ் மக்கள் வாழுகின்ற எல்லை பிரதேசங்களிலே அவ்வாறான பிரச்சினை இருகின்றதென கூறியிருந்தோம். கடந்த காலங்களிலே அவ் நிலைமை காணப்படிருகின்றது. இரண்டு வாக்குகள் போடுகின்ற சந்தர்ப்பங்களும் இருந்திருகின்றது. அதற்குரிய முறைபாடுகளை செய்து அது ஒரு வாக்காளர் ஒரு வாக்கு போடுகின்ற சந்தர்ப்பத்தினை உருவாக்கியுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியிருகின்றது.

இந்த வகையிலே அவர்களுடைய கேள்வி என்பது வரபோகின்ற ஜனாதிபதி தேர்தலிலே மக்களினுடைய சுதந்திரமான வாக்களிப்பதற்குரிய நிலைமை எப்படி இருக்கும், எப்படி இருக்கிறது என்பதனை எங்களிடம் கேட்டு அறிந்து கொண்டிருந்தார்கள்.

ஏனென்றால் தங்களினுடைய கண்காணிப்பிற்கு ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையிலே அவ்வாறான கேள்விகள் எங்களிடம் கேட்கப்படிருந்தது. அது சம்பந்தமான கருத்துகளை நாங்கள் கூறியிருகின்றோம். எனவே அவர்களுடைய வருகை என்பது தேர்தல் வன்முறையையும் தேர்தல் ஜனநாயகம் மாறுகின்ற செயற்பாடுகளையும் கண்காணிக்க கூடிய வகையிலே அவர்கள் செயற்படுவதால் இந்த வாக்காளர்கள் சுதந்திரமாக சென்று தங்களுடைய வாக்குகளை இடுவதற்காக ஒரு சந்தர்பம் கிடைத்துள்ளதாக கருதுவதாக  தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04