சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட 6 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை - குதிரைமலை கடலிலேயே அவர்கள் இவ்வாறு தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகளை பயண்படுத்தி மீன்களை பிடித்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 26 தொடக்கம் 36 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் , அவர்களிடன் இருந்து 1000 கிலோகிராம் மீன்கள் மற்றும் ஒரு மீன்பிடி படகு ஆகியவற்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.