அதி சிறந்த ரக துப்பாக்கியொன்றுடன் இளைஞரொருவரை தனமல்விலைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

மொனராகலை தனமல்விலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து தனமல்விலைப் பகுதியின் நிகவெல என்ற இடத்திலுள்ள வீடொன்றினை சுற்றிவலைத்த பொலிசார் அவ்வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை மீட்டனர்.

இந்நிலையில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் விசாரணையின் பின்னர் மொனராகலை நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென பொலிசார் தெரிவித்தனர்.