குப்­பைகள் குவிக்­கப்­படும் இடங்­க­ளுக்கு அண்­மையில் வாழ்­வது நுரை­யீரல் புற்­றுநோய் ஏற்­பட்டு இறக்கும் அபா­யத்தை அதி­க­ரிப்­ப­தாக இத்­தா­லிய விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர்.

அழுகும் குப்­பைகள் உடல் நலத்­துக்கு தீங்கு விளை­விக்கக் கூடிய வாயுக்­களை வெளி­யி­டு­வதால் அவற் றைச் சுவா­சிப்­ப­வர்கள் சுவாச பிரச்­சி­னை­க­ளுக்கு உள்­ளாக நேரி­டு­வ­தாக இத்­தா­லிய ரோம் நக­ரி­லுள்ள லஸியோ சுற்­றுச்­சூழல் பாது­காப்பு நிலை­யத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர்.

குப்­பைகள் குவிக்­கப்­படும் இடங்­க­ளி­லி­ருந்து 3 மைலுக்குள் வசிக்கும் சுமார் 250,000 பேரிடம் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்வின் போது, அவர்­களில் பலர் நோய்­வா­ய்ப்­பட்டு மருத்து­ வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டோ அல்­லது நுரை­யீரல் புற்­று­நோயால் இறந்தோ உள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­ டுள்­ளது.

மேற்­படி ஆய்வின் முடி­வுகள் இன்­டர்­ந­ஷனல் ஜேர்னல் ஒப் எபி­டெ­மி­யோ­லொஜி ஆய்­வேட்டில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

மத்­திய இத்­தா­லி­யி­லுள்ள 9 குப்பை குவிக்கும் மேடு­களில் ஒன்­றுக்கு அரு கில் வசிக்கும் மக்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்வின்போது ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்கள் சுமார் 5 வரு­டங்கள் கண்­கா­ணிக்­கப்­பட்டு அவர் கள் தொடர்­பான தக­வல்கள் சேகரிக் ­கப் பட்­டன.

இதன்­போது அந்தக் குப்பை மேட்­டி­லி­ருந்து வெளி­வந்த தீங்­கான வாயு க்­களை அதி­க­ளவில் சுவா­சித்­த­வர்­க­ளு க்கு நுரை­யீரல் புற்­று­நோயும் குறைந்­த­ளவில் சுவா­சித்­த­வர்­க­ளுக்கு கடு­மை­யான சுவாச பிரச்­சி­னை­களும் ஏற்­பட்­டி­ருப்­பது அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்தக் குப்பை மேட்­டி­லி­ருந்து பொது­வாக அழுகும் மரக்­க­றி­க­ளி­லி­ ருந்து வெளி­வரும் தீங்கு விளைவிக் கும் வாயுவான ஐதரசன் சல்பைட் அதிகளவில் வெளிப்படுவது மேற்படி ஆய்வில் கண்டறியப்பட்டது. அந்த வாயு அழுகிய முட்டையிலிருந்து வெளிப்படுவதை ஒத்த மணத்தைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.